ப்ளூ பிலிம் எடுத்தா கூடாதா நல்லா வசூல் பண்ணும்..ஜெயிலர் 2 பற்றி பேசி தொக்காக மாட்டிய ராஜகுமாரன்
ரஜினியில் ஜெயிலர் திரைப்படத்தை ஆபாச படத்துடன் ஒப்பிட்டு இயக்குநர் ராஜகுமாரன் பேசியுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய விதமாக பேசி வரும் திரைப்பட இயக்குநர் ராஜகுமாரன் தற்போது ரஜினி பக்கம் திரும்பியுள்ளார் . ரஜினியின் ஜெயிலர் படத்தைப் பற்றி அண்மையில் நேர்காணல் ஒன்றில் அவர் பேசியுள்ளது ரஜினி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீ வருவாய் என , விண்ணுக்கு மண்ணுக்கும் என சில ஹிட் படங்களை கொடுத்த ராஜகுமாரன் தற்போது வேலையேதுமில்லாமல் யூடியூப் சேனல்களில் வெட்டி கதை பேசி வருகிறார். பிரபல நடிகர்களை பற்றி சர்ச்சைக்குரிய விதமாக பேசுவதையே பழக்கமாக செய்துவருகிறார். உலகநாயகன் கமல்ஹாசன் எல்லாம் ஒரு பெரிய நடிகரே இல்லை என கருத்து தெரிவித்து கமல் ரசிகர்களிடம் வாங்கிகட்டிக் கொண்டு ஒரு சில நாட்களில் மன்னிப்பு கேட்டார். நடிகர் விக்ரம் , அவரது மகன் துருவ் ஆகியோரைப் பற்றிய பேசினார். பின் தனது சொந்த மனைவி தேவயானி பற்றியே அவர் சொன்ன கருத்து ரசிகர்களிடையே முகம் சுளிக்க வைத்தது. அந்த வகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.
ஜெயிலர் பற்றி ராஜகுமாரன்
ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தைப் பற்றி யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய ராஜகுமாரன் "நான் இப்ப வர படங்களை பார்ப்பதே இல்ல, அப்படி தான் ஜெயிலர் பாத்தேன், பாக்கவே கொடுமையா இருந்தது, பாதி படத்துலயே ஓடி வந்துடலாமானு ஆகிடிச்சி, சகிக்க முடியல. இதுல 600 கோடி வசூல் பண்ணி இருக்குனு சொல்றீங்க, நீங்க ப்ளூ பிலிம் எடுத்தா கூடாதா நல்லா வசூல் பண்ணும், இதுல பார்ட் 2 வேற எடுக்குறாங்க. அந்த படம் மூலமா ரஜினி என்ன மக்களுக்கு சொல்லிட்டார், பணம் வரணும், சம்பளம் ஏறணும், தியேட்டர்களுக்கு பணம் வரணும்னு படம் பண்ணிக்கிட்டு இருக்கார்" என்று கூறியுள்ளார்.
தெரிந்தே சிங்கத்தில் வாயில் கைவைத்துள்ளா ராஜகுமாரன். ஏற்கனவே கமல் ரசிகர்கள் அவர்மீது கடும் கோபத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் தனது கருத்திற்காக ராஜகுமாரன் மன்னிப்பு வீடியோ வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்
ஜெயிலர் 2
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து வருகிறது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் , விஜய் சேதுபதி , ஷிவராஜ்குமார் , மோகன்லால் , வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.





















