மேலும் அறிய

‛முதல் நாள் கிளம்பச் சொன்னேன்... மறுநாள் கடைசி வாய்ப்பு கேட்டான்’ மன்சூர் அலிகான் குறித்து செல்வமணி சொன்ன ரகசியம்!

Mansoor Ali Khan| மன்சூர் அலிகான் எப்போதுமே ஒரு சிறந்த நடிகன் என பெருமிதம் கொள்ளும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவர் தனது முதல் படத்தில் செய்த சுவாரஸ்யங்களைபகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் 80-90 காலக்கட்டத்தில் வில்லனாக மிரட்டியவர் நடிகர் மன்சூர் அலிகான். வித்தியாசமான முக பாவனைகள் , தனக்கென தனி உடல்மொழி என திரையில் மிரட்டிய மன்சூர் அலிகான் , தனக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் தன்னுடைய பாணியில் நேர்த்தியாக நடிக்க கூடியவர். மன்சூர் அலிகானை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணிதான். விஜயகாந்த் நடிப்பில். செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன் ‘ . இந்த திரைப்படத்தில்தான் மன்சூர் அலிகான் முதன் முதலாக அறிமுகமானார். வீரபத்திரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகான் , முதல் கதாபாத்திரத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

‛முதல் நாள் கிளம்பச் சொன்னேன்... மறுநாள் கடைசி வாய்ப்பு கேட்டான்’ மன்சூர் அலிகான் குறித்து செல்வமணி சொன்ன ரகசியம்!

மன்சூர் அலிகான் எப்போதுமே ஒரு சிறந்த நடிகன் என பெருமிதம் கொள்ளும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. அவர் தனது முதல் படத்தில் செய்த சுவாரஸ்யங்களைபகிர்ந்துள்ளார். மன்சூர் அலிகான் முதல் படமான கேப்டன் பிரபாகரனில் நடித்த கதாபாத்திரமான வீரபத்திரன் , சந்தனக்கடத்தல் வீரப்பனின் சாயலை கொண்டு உருவாக்கப்பட்டது. படத்தில் மன்சூர் அலிகான் காதில் ஒரு கடுக்கன் ஒன்றை அணிந்திருப்பார். அது ஷூட்டிங் சமயத்தில் கீழே விழுந்துவிட்டதாம் . உடனே காஸ்டியூம் அசிஸ்டண்ட் கடுக்கன் கீழே விழுந்துவிட்டது எங்கே என பார் என்றாராம். அதற்கு மன்சூர் அலிகான் “ நீயே பாருடா...” என திமிராக கூறியிருக்கிறார். பளார் என அறைவிட்டதாக கூறிய செல்வமணி, மன்சூர் அலிகான் தன்னிடம் வந்து ‘அண்ணே ...வீரப்பன்கிட்ட எப்படி பேசனும்னு சொல்லிக்கொடுங்கண்ணே “ என்றாராம். இதன் மூலம் கொடுக்கும் கதாபாத்திரமாகவே மன்சூர் அலிகான் மாறிவிடுவார் என்கிறார் செல்வமணி.

‛முதல் நாள் கிளம்பச் சொன்னேன்... மறுநாள் கடைசி வாய்ப்பு கேட்டான்’ மன்சூர் அலிகான் குறித்து செல்வமணி சொன்ன ரகசியம்!

இதே போலதான் குதிரை சவாரி ஒன்றை செய்ய வேண்டியிருந்ததாம். இது குறித்து மன்சூர் அலிகானிடம் . “உனக்கு குதிரை ஓட்ட தெரியுமாடா ?” என கேட்டாராம் செல்வமணி. அதற்கு மன்சூரும் “ம்ம்ம்ம் பண்ணிடலாம்ணே ..” என்றாராம். உடனே தமிழ் சினிமாவில் பிரபலமான குதிரை ஒன்றை அழைத்து வந்தார்களாம் . குதிரை உரிமையாளர் எப்படி  குதிரை ஓடுவது என சில டிப்ஸுகளை சொல்லியிருக்கிறார். அப்போது ஃபிலிமில்தான் படம் எடுக்க வேண்டும் என்பதால் கொடுக்கப்பட்ட ஃபிலிம்ஸுக்கு காட்சியை எடுத்தாக வேண்டும். 74 ஃபிரேமில் எடுக்க வேண்டிய காட்சி என்பதால் மிகுந்த வேகமாவும் நேர்த்தியாகவும் குதிரையை கையாள வேண்டும் என கூறியிருக்கிறார் செல்வமணி..லைட்...கேமரா..ஆக்‌ஷன் என்றதும், குதிரை ஒரே இடத்திலேயே இருந்திருக்கிறது. உடனே செல்வமணி என்ன ஆச்சு என கேட்டாராம். அதற்கு மன்சூர் அலிகான் “குதிரை வரமாட்டிங்குது அண்ணே..” என்றாராம். அதன் பிறகு இரண்டு மூன்று டேக்குகளுக்கு பிறகு குதிரை பயிற்சியாளரை அழைத்து பார்க்க சொன்னாராம் செல்வமணி. அப்போதுதான் மன்சூர் குதிரையை இறுக்கமாக பிடித்திருப்பது தெரிந்திருக்கிறது. உடனே அவரை திட்டியிருக்கிறார் செல்வமணி. இதனால் கோவமான மன்சூர் குதிரையை சரமாரியாக அடித்துவிட்டாராம். குதிரை பின்னர் அத்துமீரி ஓட ஆரமிக்க , கேமராவை தாண்டி குத்தித்ததும். மன்சூர் அலிகான் தனியாக பறந்து வந்திருக்கிறார். அதன் பிறகு பேக் செய்துவிட்டு , வீரப்பன் கதாபாத்திரத்திற்கு வேறு ஆளை மாற்றலாம் என முடிவெடுத்துவிட்டாராம் மன்சூர். பின்னர் இரவு முழுவதும் பயிற்சி எடுத்து, அடுத்த நாள் ஒரே ஒரு முறை, நான் ஓட்டிக்காட்டுகிறேன் , அதன் பிறகு முடிவெடுங்கள் என்றாராம் மன்சூர் அலிகான். அதன் பிறகு அற்புதமாக குதிரை ஓட்டினார் , அவர் ஒரு விடாமுயற்சி கொண்ட கலைஞன் என பெருமிதம் கொள்கிறார் செல்வமணி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Embed widget