மேலும் அறிய

Mysskin: கெஞ்சிக் கேட்கிறேன்; நடிகைகளை தவறா பேசாதீங்க - திரிஷாவுக்காக குரல் கொடுத்த மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகை திரிஷா இருவரும் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்து தனது தீவிரமான முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் நடிகையாக உயர்ந்தவர். இவரது நடிப்பில் இறுதியாக லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னர் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிகை திரிஷா குந்தவை கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். 

இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து கடந்த வாரம் முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜூ என்பவர் மிகவும் அருவருக்கத்தக்க மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டினை ஊடகங்களில் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக, பரவவே பல்வேறு திரைக் கலைஞர்களையும் கொதிப்படையச் செய்தது. இது தொடர்பாக நடிகர் சங்கம் கண்டனங்களைத் தெரிவித்தது. நடிகை திரிஷா சம்பந்தப்பட்ட அதிமுக நிர்வாகிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது மட்டும் இல்லாமல், அவதூறு வழக்கையும் தொடுத்துள்ளார். 

இந்நிலையில் டபுள் டக்கர் படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது பேசிய இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், நான் இதுவரை நடிகை திரிஷாவை இரண்டு முதல் மூன்று முறைதான் பார்த்திக்கின்றேன். திரிஷா குறித்து அவதூறு செய்தி பரவியபோது அவர் எங்களது ஸ்டூடியோவில்தான் பணியாற்றிக்கொண்டு இருந்தார். எனது உதவியாளர்கள் வந்து நடந்தை என்னிடம் கூறினர். திரிஷா மிகவும் வருத்தத்தோடு இருப்பதாக கூறினர். ஒரு நடிகையைப் பற்றி நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் சாவித்திரி, மனோரமா, கே.ஆர்.விஜயா, சரோஜா தேவி ஆகியோரைப் பார்த்து வளர்ந்திருக்கின்றோம். எனது பெற்றோர்கள் உதாரணத்திற்காக சொல்லும்போது கூட ஆடிப்பெருக்கு படத்தில் ஒரு பெண் தனது காதலை எப்படி தியாகம் செய்கின்றாள் என சொல்லி வளர்த்தார்கள். சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி போன்றோர் எனக்கு பெரிய அம்மாக்கள் போன்றவர்கள். இன்னும் சொல்லப்போனால் எனது தாயாரின் தாய்கள். 

ஒரு நடிகையைப் பற்றி மிகவும் எளிமையாக எதையும் பேசிவிடாதீர்கள். அவர்கள் அனைவரும் தொழில்முறை நடிகர்கள். நான் இரண்டு முறை திரிஷாவைப் பார்த்துள்ளேன். மிகவும் எளிமையாகவும் மேன்மையாகவும் பேசுவார்கள். நான் மிகவும் மனது வருத்தப்பட்டேன். மிகவும் பரபரப்பான செய்தி வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் ஒரு நடிகை தாய், நடிகை ஒரு பெண். ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசாதீர்கள். நான் யார் பேசினார்கள், யார் அதனை செய்தியாக்கினார்கள் என்பதைப் பற்றி நான் பேசவில்லை. இந்த விஷயத்தில் நாம் பாக்கவேண்டியது, ஒரு பெண்ணைப் பற்றி குறிப்பாக நமது வீட்டில் உள்ள ஒரு பெண்ணைப் பற்றி இப்படி பேச விடுவோமா? நம்ம வீட்டில் இருக்கும் ஒரு தங்கச்சியைப் பற்றி, நம்ம வீட்டில் உள்ள ஒரு தாயைப் பற்றி, நம்ம வீட்டில் உள்ள அக்காவைப் பற்றி, நம்ம வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணைப் பற்றி தவறாக பேசினால் நாம் அனுமதிப்போமா? தயவு செய்து இதுபோன்று செய்யாதீர்கள். மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கின்றேன்” என இயக்குநர் மிஷ்கின் பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’10 % கமிஷன், SVC சான்று பெற லஞ்சம்’ PWD அதிகாரிகளின் ஊழல் – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
’10 % கமிஷன், SVC சான்று பெற லஞ்சம்’ PWD அதிகாரிகளின் ஊழல் – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
மக்களே கவனம்: தமிழ்நாட்டில் 2 டிகிரி வரை உயரும் வெப்பநிலை- வானிலை மையம் எச்சரிக்கை
மக்களே கவனம்: தமிழ்நாட்டில் 2 டிகிரி வரை உயரும் வெப்பநிலை- வானிலை மையம் எச்சரிக்கை
Indian Stock Index Climb: ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...
ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...
China Troll: அவங்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தான்.. ஆனா அவங்க போட்டுருக்கற ட்ரெஸ்.?!?
அவங்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தான்.. ஆனா அவங்க போட்டுருக்கற ட்ரெஸ்.?!?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Ponmudi : பொன்முடிக்கு போர்க்கொடி! குரலை உயர்த்திய புஷ்பராஜ்! ரசிக்கும் லட்சுமணன்?Annamalai Slams DMK | காவலரை தாக்கிய விவகாரம் எங்கிருந்து துணிச்சல் வந்தது?  திமுகவை விளாசிய அ.மலைTVK Vijay: தேறாத நடிகர் விஜய்! படபிடிப்பா? மக்களா? புலம்பி தவிக்கும் தவெகவினர்Dhruv Vikram Anupama Parameswaran Dating | துருவ்-அனுபமா காதல்?வைரலாகும் LIPLOCK போட்டோ PRIVATE-ஆன SPOTIFY ப்ளேலிஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’10 % கமிஷன், SVC சான்று பெற லஞ்சம்’ PWD அதிகாரிகளின் ஊழல் – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
’10 % கமிஷன், SVC சான்று பெற லஞ்சம்’ PWD அதிகாரிகளின் ஊழல் – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
மக்களே கவனம்: தமிழ்நாட்டில் 2 டிகிரி வரை உயரும் வெப்பநிலை- வானிலை மையம் எச்சரிக்கை
மக்களே கவனம்: தமிழ்நாட்டில் 2 டிகிரி வரை உயரும் வெப்பநிலை- வானிலை மையம் எச்சரிக்கை
Indian Stock Index Climb: ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...
ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...
China Troll: அவங்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தான்.. ஆனா அவங்க போட்டுருக்கற ட்ரெஸ்.?!?
அவங்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தான்.. ஆனா அவங்க போட்டுருக்கற ட்ரெஸ்.?!?
ABP NADU IMPACT: மருத்துவ உதவி கோரிய பாம்பு பிடிவீரர் - உதவிய மயிலாடுதுறை எம்பி...!
ABP NADU IMPACT: மருத்துவ உதவி கோரிய பாம்பு பிடிவீரர் - உதவிய மயிலாடுதுறை எம்பி...!
Minister Ponmudi: அமைச்சர் பதவிக்கும் ஆப்பா?- பொன்முடியை நீக்கக் கோரி ஆளுநரிடம் முறையீடு
Minister Ponmudi: அமைச்சர் பதவிக்கும் ஆப்பா?- பொன்முடியை நீக்கக் கோரி ஆளுநரிடம் முறையீடு
அஜித்திற்கு தைரியம்.. விஜய் சொன்னதை ஏற்க முடியாது - சிபிராஜ் பரபரப்பு பேட்டி
அஜித்திற்கு தைரியம்.. விஜய் சொன்னதை ஏற்க முடியாது - சிபிராஜ் பரபரப்பு பேட்டி
NCERT: பள்ளி பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்; கிளம்பும் புது சர்ச்சை- நடந்தது என்ன?
NCERT: பள்ளி பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்; கிளம்பும் புது சர்ச்சை- நடந்தது என்ன?
Embed widget