ஆன்மாவை சுத்தப்படுத்தணும்னு எடுத்திருக்கார்.. கடைசி விவசாயி பத்தி சீக்ரெட் சொன்ன மிஸ்கின்
”ஒரு படம் நல்ல படமா எடுக்கனும் , சமுதாயத்திற்கு தேவைப்படுவதாக இருக்க வேண்டும். ஆன்மாவை சுத்தப்படுத்த வேண்டும்”
மிஸ்கின் மாறுபட்ட கோணத்தில் படத்தை அணுகக்கூடிய ஒரு படைப்பாளி. தற்போது இவரது இயக்கத்தில் பிசாசு 2 விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் மிஸ்கின்தான் ரசிக்கும் படம் குறித்த விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாரி படத்தை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டியிருக்கிறார் அதோடு மட்டுமல்லாமல் அந்த படம் குறித்தான தனது பார்வையை வீடியோவாகவே வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
” நிறைய வேலைகள் இருந்ததால இப்போதான் படத்தை பார்த்துட்டு வற்றேன். படத்தின் இடைவேளை சீன பார்த்த பிறகு நான் விழுந்து விழுந்து அழுதிருக்கணும் , ஆனால் இரண்டு மூன்று கண்ணீர் துளியோட அப்படியே உட்கார்ந்து இருந்தேன். படம் குறித்து எழுதலாமா அல்லது பேசலாமா என்ற பொழுது , இப்படியாக வீடியோ எடுக்கலாம் என தோன்றியது. மிஸ்கின் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி கூறுவார் என்று சொல்வார்கள் . நான் என் மனதில் இருந்து பேசுகிறேன். என் மகளை இந்த படத்தை பார்க்க சொல்லுவேன். நான் விவசாயியாக இல்லையே என வருத்தம் . என் மகள் கனடாவில் படிக்கிறாள் . அவள் அங்கேயே தங்கிவிடுவாளா என எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் மறுமுறை ஆலோசிக்க சொல்லுவேன்.ஒரு படம் நல்ல படமா எடுக்கணும் , சமுதாயத்திற்கு தேவைப்படுவதாக இருக்க வேண்டும்.
ஆன்மாவை சுத்தப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மணிகண்டன் இந்த படத்தை எடுத்திருக்கிறார். 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் கடைசி விவசாயி படத்தை சொல்லுவேன். படம் ஸ்லோவா போகுதுனு குழந்தைகள் கேட்டா , இந்த படத்தை பார்க்கணும்னு சொல்லுங்க. வீட்டில் இருக்க அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். மணிகண்டன் ஒவ்வொரு ஃபிரேமுன் வைத்திருக்கும் விதத்தை ஒரு இயக்குநரா என்னால உணர முடியுது . மிஸ்கின் சிறப்பாக ஃபிரேம் வைப்பாருனு சொல்லுவாங்க . அப்படியெல்லாம் ஒரு ம**ரும் கிடையாது . அந்த அளவிற்கு காட்சிகளை எடுத்துள்ளார் மணிகண்டன். இந்த படத்திற்காக ஒரு விழா எடுக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறார்.“ என மணிகண்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் மிஸ்கின்.