மேலும் அறிய

Kaithi 2: "டில்லி சீக்கிரமா வரப்போறான்" விரைவில் கைதி 2 ஆரம்பம்! லோகேஷ் கனகராஜ் தந்த அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி பட புகைப்படத்தை பகிர்ந்து டில்லி விரைவில் மீண்டும் வருவான் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் கைதி என்ற ஆக்‌ஷன் படத்தை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம்பிடித்தார். அடுத்தடுத்து அவர் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்கள் மூலமாக தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

டில்லி சீக்கிரம் திரும்ப வருவான்:

விக்ரம் படம் மூலமாக இவர் உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ், ரோலக்ஸ் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் லியோ படமும் இணைந்தது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படமாக எல்.சி.யூ. வரிசை படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கைதி படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து “ அனைத்தும் தொடங்கியது இங்கேதான். இந்த யுனிவர்ஸ் உருவாவதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர் கார்த்திக்கிற்கு மிக்க நன்றி. டில்லி விரைவில் திரும்ப வருவான்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

விரைவில் கைதி 2:

2019ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வெளியான கைதி படம் வெளியாகி நேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் நேற்று இந்த பதிவை பதிவிட்டுள்ளார். கைதி படத்தின் முடிவிலே இரண்டாம் பாகத்தின் தொடக்கமாகவே காட்டியிருப்பார்கள்.

அதேபோல, விக்ரம் படத்தின் இறுதியிலும் டில்லி என்ற கதாபாத்திரத்தை குறிப்பிட்டு கார்த்தியின் குரல் ஒலிக்கும். லோகேஷ் கனகராஜூம் கைதி 2ம் பாகம் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில், டில்லி விரைவில் மீண்டும் வருவார் என்ற லோகேஷ் கனகராஜின் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும்  உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தலை மையமாக எடுத்த கைதி படம் ஒரே இரவில் நடப்பது போல எடுக்கப்பட்டிருக்கும். கார்த்தியுடன் அர்ஜூன் தாஸ், ஜார்ஜ் மரியன், நரைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அந்தாண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த கைதி படம் கார்த்தியின் திரை வாழ்வில் மற்றொரு ஏறுமுகத்தை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
Embed widget