Coolie: விக்ரமை தொடர்ந்து கூலி! ஒளிப்பதிவாளரை புக் செய்த லோகி! ரஜினி படத்தில் இணையும் பிரபலங்கள்?
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் கூலி படத்தில் விக்ரம் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளார்.
கூலி
லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியின் 171 ஆவது படத்தை இயக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
கூலி படக்குழுவினர்
கடந்த ஏப்ரல் மாதம் கூலி படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் ஐமேக்ஸ் கேமராவில் படம்பிடிக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து பேசியபோது ரஜினி ஹீரோ வில்லன் கலந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறியிருந்தார். லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்கள் போதைப் பொருட்கள் கடத்தலை மையப்படுத்தி இருந்த நிலையில் இந்தப் படம் தங்கம் கடத்தலை மையப்படுத்திய ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
விக்ரம் படத்தைத் தொடர்ந்து கூலி படத்திற்கு ஓளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் உடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கூலி படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்வதை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு உறுதிப் படுத்தியுள்ளார். இப்படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர்களைப் பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்க இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள்
Happy to have you onboard once again @girishganges machi 👍 Cast updates coming soon!#Coolie 🔥 pic.twitter.com/KFBVeBgzcq
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 3, 2024
கூலி படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இதனை நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சி ஒன்றிலும் உறுதிபடுத்தியிருந்தார். கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் ரஜினி மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் கமலின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப் படுகிறது. படக்குழு சார்பாக இந்த தகவல் உறுதிப்படுத்த படும்வரை ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் .
மேலும் படிக்க : Chutney Sambar Teaser : யோகி பாபு நாயகனாக நடிக்கு புதிய சீரிஸ்... வரவேற்பை பெறும் சட்னி சாம்பார் டீசர்
Big Production House Movies : பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் உருவாகி வரும் திரைப்படங்கள்!