Maharaja: வாவ்! மகாராஜா இயக்குனரை பாராட்டிய பிரபல இயக்குனர் எச்.வினோத்!
மகாராஜா படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனை பிரபல இயக்குனர் எச்.வினோத் பாராட்டியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மகாராஜா. குரங்கு பொம்மை படம் மூலமாக சிறந்த இயக்குனராக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற நித்திலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மகாராஜா இயக்குனரை பாராட்டிய எச்.வினோத்:
மகாராஜா படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் எச்.வினோத்தை, இயக்குனர் நித்திலன் சாமிநாதன் நேரில் சந்தித்தார். அப்போது, மகாராஜா படத்தை சிறப்பாக எடுத்ததற்காக இயக்குனர் எச்.வினோத் அவரை பாராட்டினார்.
It was a pleasure having a great conversation with you thalaivare ❤️❤️#Maharaja#VJS50 pic.twitter.com/8TNKD7XXsZ
— Nithilan Saminathan (@Dir_Nithilan) June 15, 2024
எச்.வினோத்தை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் நித்திலன் உங்களுடனான சிறந்த உரையாடல் மிகுந்த மகிழ்ச்சி தலைவரே என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இருவரும் அடுத்தடுத்த பட வேலைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
வசூலை குவிக்கும் மகாராஜா:
நித்திலன் பெரியசாமி இயக்கிய மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, பாய்ஸ் பட புகழ் மணிகண்டன், அனுராக் காஷ்யப், நட்ராஜன், முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் மகாராஜா படம் முதல் நாளில் மட்டும் ரூபாய் 4.50 கோடி வசூலை குவித்துள்ளது.
இயக்குனர் எச்.வினோத் தற்போது தனது அடுத்த பட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். நடிகர் விஜய்யின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: TTF Vasan: ஐ.பி.எல்.-இல் களம் காணும் டிடிஎஃப் வாசன் - கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!
மேலும் படிக்க: Maharaja Box office Collections: ”வசூல் மகாராஜா” - விஜய் சேதுபதியின் 50 வது படத்தின் முதல் நாள் கலெக்ஷன் இவ்வளவா?