Maharaja Box office Collections: ”வசூல் மகாராஜா” - விஜய் சேதுபதியின் 50 வது படத்தின் முதல் நாள் கலெக்ஷன் இவ்வளவா?
சாதாரண கதையை திரைக்கதை மூலம் அசால்ட் செய்திருந்தார் நித்திலன் சுவாமிநாதன். இதனால் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பாராட்டை மகாராஜா படம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் என்னவென்று காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் ஆக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. பல படங்களில் துணை வேடங்களில் நடித்த அவர், 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவானார். 14 ஆண்டுகளில் 50 படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர் ஆகிய துறைகளிலும் அடியெடுத்து வைத்தார். மேலும் ரஜினிகாந்த், விஜய், ஷாரூக்கான் படங்களில் வில்லனாகவும் அசத்தினார்.
A year ago on #Maharaja shooting spot
— Nithilan Saminathan (@Dir_Nithilan) June 15, 2024
@VijaySethuOffl #Maharaja#VJS50 pic.twitter.com/DnwiT9xHxP
இதனிடையே விஜய் சேதுபதியின் 50வது படமாக “மகாராஜா” வெளியாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தின் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள இந்த படத்தில் மமதா மோகன் தாஸ், விருமாண்டி அபிராமி, அனுராக் காஷ்யப், நட்டி, பாய்ஸ் மணிகண்டன், சிங்கம்புலி, முனிஷ்காந்த் என பலரும் நடித்துள்ளனர்.
Hardhitting, violent and yet a very riveting film
— Fahir Maithutty (@fahir_me) June 15, 2024
The tension in several scenes is brilliantly built and executed. Vijay Sethupathi's performance is not only great,it's amazing he moulds into this person entirely different from the 49 other characters he's done before#Maharaja pic.twitter.com/q9ylWn34e5
அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே போஸ்டர், ட்ரெய்லர் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்றதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் வெளியானது.
சாதாரண கதையை திரைக்கதை மூலம் அசால்ட் செய்திருந்தார் நித்திலன் சுவாமிநாதன். இதனால் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பாராட்டை மகாராஜா படம் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் முதல் நாளில் ரூ.4.50 கோடி வசூலை பெற்றுள்ளதாக sacnilk இணையதளம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படம் தொடங்கப்படுவதற்கு முன்னால் நித்திலன் சுவாமிநாதனுக்கு முத்தம் ஒன்றை பரிசாக கொடுத்து ”எனக்கு உன்னோட படம் பண்ணுவதில் ரொம்ப சந்தோசம்.. இந்த படம் முடிந்த பிறகு இந்த வீடியோவை சேர்ந்து போடுவோம்” என தெரிவித்திருந்தார்.