Cheran: காதலியை நினைவுபடுத்திய பார்த்திபன்... ட்விட்டர் மூலம் எக்ஸ்க்கு தூது விட்ட சேரன்! சுவாரஸ்ய போஸ்ட்!
Cheran : உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்புறேன் என்று இயக்குநர் சேரன் தனது எக்ஸுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
![Cheran: காதலியை நினைவுபடுத்திய பார்த்திபன்... ட்விட்டர் மூலம் எக்ஸ்க்கு தூது விட்ட சேரன்! சுவாரஸ்ய போஸ்ட்! director cheran replies to director r parthiban about their lost love Cheran: காதலியை நினைவுபடுத்திய பார்த்திபன்... ட்விட்டர் மூலம் எக்ஸ்க்கு தூது விட்ட சேரன்! சுவாரஸ்ய போஸ்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/16/6d08aca9b7330e0710af983c06850f6e1710583291975572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உங்கள் இழந்த காதலிக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று இயக்குநர் பார்த்திபனின் பதிவுக்கு இயக்குநர் சேரன் பதிலளித்துள்ளார்.
சேரன்
தமிழ் சினிமாவில் காதலை மிக காவியத்தன்மையுடன் சித்திரிக்க முயன்றவர் இயக்குநர் சேரன் . ஆட்டோகிராஃப் , பாண்டவர் பூமி, பொக்கிஷம் உள்ளிட்ட சேரன் இயக்கிய படங்கள் காதலை கவித்துவத்துடன் பேசிய படங்கள். குறிப்பாக சேரன் இயக்கிய பொக்கிஷம் படம் இரண்டு காதலர்களுக்கு இடையிலான கடிதம் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டிருந்தது. இந்த மாதிரியான கதைகளை காதலிக்காமல் ஒரு இயக்குநரால் எழுதிவிட முடியாது. நிச்சயமாக சேரனின் வாழ்க்கை அழகான காதல் கதைகளால் நிறைந்த ஒன்றாக இருந்திருக்கும். தற்போது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் அவரது இளமை காதல் எப்படியானதாக இருந்திருக்கும் என்பதைப் பற்றி ஒரு சிறு அறிகுறி கிடைத்துள்ளது.
உங்கள் இழந்த காதலுக்கு என்ன சொல்வீர்கள்
இழந்த காதலி, காதலனை திருமணத்துக்கு பிறகு நீங்கள் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் பேச நினைப்பது..?
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 15, 2024
நினைப்பதை அனுப்புங்கள்..
மீண்டும் நாளை பேசுகிறேன்..!#LostAndFoundLove
சமீபத்தில் இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் ”இழந்த காதலி, காதலனை திருமணத்துக்கு பிறகு நீங்கள் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் பேச நினைப்பது..? நினைப்பதை அனுப்புங்கள்.. மீண்டும் நாளை பேசுகிறேன்..!” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு இயக்குநர் சேரன் பதிலளித்துள்ளார்.
உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்புறேன்
உன்னோட வாழ்க்கை நல்லா இருக்குன்னு நம்புறேன். அதுக்கான prayer என்கிட்ட இருந்து எப்பவும் இருக்கும்.. உன்னோட நினைவுகள் எனக்குள்ள பத்தரமா இருக்கு.. உன்னோட குரல் மட்டும் எங்கயோ கேட்காம போச்சு.. அதுதான் என்னோட சந்தோசம்னு தெரியும்.. அப்பப்போ பேசு .. அது போதும்.. Love You ❤️ https://t.co/LeGyueEMya
— Cheran (@directorcheran) March 15, 2024
பார்த்திபனின் பதிவுக்கு பதிலாக சேரன் “ உன்னோட வாழ்க்கை நல்லா இருக்குன்னு நம்புறேன். அதுக்கான prayer என்கிட்ட இருந்து எப்பவும் இருக்கும். உன்னோட நினைவுகள் எனக்குள்ள பத்தரமா இருக்கு.. உன்னோட குரல் மட்டும் எங்கயோ கேட்காம போச்சு.. அதுதான் என்னோட சந்தோசம்னு தெரியும். அப்பப்போ பேசு.. அது போதும்.. Love You” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் படிக்க : Siragadikka Aasai:தெரிய வரும் உண்மை...ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய விஜயா- சிறகடிக்க ஆசையில் இன்று!
Shanthi Williams: வாங்காத அடியே இல்லை.. நடுத்தெருவில் விட்ட கணவன்.. சாந்தி வில்லியம்ஸின் சோகக்கதை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)