பிரேமம் திரைப்படத்தில் நிவின்பாலிக்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்த முதல் சாய்ஸ் யார் தெரியுமா?
பிரேமம் படத்தில் நிவின்பாலிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
மலையாள திரைப்படமான பிரேமம் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோரின் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளி வந்தது. ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பையும் இத்திரைப்படம் பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் நிவின்பாலிக்கு பாதிலாக வேறொரு மலையாள நடிகர் நடிக்கவிருந்ததாக தகவல் வெளியானது. அது வேறு யாரும் இல்லை துல்கர் சல்மான்தானாம். அல்போன்ஸ் புத்திரனும் நிவின் பாலியும் சினிமா உலகத்தை தாண்டியும் நல்ல நண்பர்களாம்.
இதனால் நிவின்பாலி தன்னுடன் இணக்கமாக பணியாற்ற முடியும் என்று அல்போன்ஸ் நினைத்தாராம். இதுதான் அவர் துல்கர் சல்மானை விடுத்து நிவின்பாலியை தேர்வு செய்ததற்கு காரணம் என சொல்லப்படுகின்றது. மேலும் இதற்கு முன்னதாக அல்போன்ஸ் இயக்கத்தில் வெளியான நேரம் திரைப்படத்திலும் நிவின்பாலி ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரேமம் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. சாய் பல்லவி தன் அறிமுக படத்திலேயே ரசிகளின் கவனத்தை ஈர்த்தார். படு கேஷூவலாக நடித்த ஜார்ஜ் மற்றும் அவர்களின் நண்பர்கள் கதாபாத்திரமும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படம் மலர் டீச்சருக்கு மட்டும் அல்ல ஜார்ஜுக்கும் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. சாய்பல்லவியின் மேக்கப் இல்லாத இயல்பான நடிப்பும் அவருக்கு அப்லாஸ் வாங்கி கொடுத்தது.
இந்த படத்தில் ஹீரோ மூன்றாவது காதலியைத்தான் கரம் பிடிப்பார். முதல் காதலும், கல்லூரி காதலும், காதலாக கடந்து போயிருக்கும் இதற்கு இடைப்பட்ட காதல் கதைதான் படத்தின் முதுகெலும்பு. சாய் பல்லவி - நிவின்பாலியின் டீசண்டான காதல் காட்சிகள், சாய் பல்லவியின் நடன காட்சிகள் ஆகியை ரசிகர்கள் தங்கள் பார்வையை திரையில் இருந்து நகராதவாறு கட்டிப்போட்டிருக்கும்.
மேலும் படிக்க