Vignesh Shivan: நயன்தாரா புருஷன் விக்கி அந்த கவர்ச்சிக்கு நடிகை வீட்டில் எடுபுடி வேலை செய்தாரா? ஷாக் கொடுத்த பிஸ்மி!
விக்னேஷ் சிவன் ஆரம்ப காலகட்டங்களில், நடிகை சோனாவின் வீட்டில் எடுபிடி வேலை பார்த்தார் என்று வலைப்பேச்சு பிஸ்மி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
போடா போடி தோல்வி:
சிம்பு நடிப்பில் வந்த 'போடா போடி' படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். ஆனால், 'போடா போடி' படமானது சொல்லி கொள்ளும் அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு விக்னேஷ் சிவன் 'நானும் ரௌடிதான்' படத்தை இயக்கினார். இந்தப் படத்தை தனுஷ் தயாரித்தார். விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே பாலாஜி, ஆனந்தராஜ் ஆகிய பலர் நடித்திருந்தனர்.
நயன்தாராவுடன் காதல்:
இந்தப் படத்தின் மூலமாகத்தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் கதை உருவானது. 7 ஆண்டுகளுக்கு பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என்று, தற்போது இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்:
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தலைப்புச் செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கிறாரகள். ஏற்கனவே தனுஷ் மற்றும் நயன்தாராவின் நானும் ரௌடி தான் பட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக கூறப்பட்டது. அதற்கு விக்னேஷ் சிவன் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு கேட்கவில்லை. புதுவை விமான நிலையத்தில் ஷூட்டிங் நடத்த அனுமதி கோரி பாண்டிச்சேரி சென்றிருந்தேன். அப்போது தான் சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்து பேசினேன். என்னுடன் வந்தவர் தான் ஹோட்டல் பற்றி விசாரித்தார் என்று கூறினார்.
கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் எடுபிடி:
இந்த நிலையில் தான் விக்னேஷ் சிவன் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி முக்கியமான ரகசியத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி தோல்வி அடைந்து ஒரு கட்டத்தில் வாழ்க்கையை ஊட்டுவதற்கே விக்னேஷ் சிவன் கஷ்டப்பட்டார். அப்போது நடிகை சோனாவின் வீட்டில் தான் இருந்தார். அவர் வீட்டுக்கு தேவையான எடுபிடி வேலைகளை செய்து கொடுத்தார் என்றும், இது பற்றி நான் சொல்லவில்லை, நடிகை சோனாவிடம் கேட்டால் அவரே எல்லா கதைகளையும் சொல்லிடுவார் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சோனாவிடம் பேட்டி எடுக்க பலர் முயற்சி வருவதாகவும், உள்ளதை உள்ளபடி கூறும் சோனா... இன்னும் இதுபற்றி என்னென்ன உண்மைகளை போட்டுக்க போகிறார் என கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம்.