மேலும் அறிய

Dhruva Natchathiram 2nd Single: துருவ நட்சத்திரம் படத்தின் 2ஆவது பாடல் அப்டேட்... குஷியில் விக்ரம் ரசிகர்கள்!

Dhruva Natchathiram 2nd Single: துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது.

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை (19.07.2023) காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Dhruva Natchathiram 2nd Single: துருவ நட்சத்திரம் படத்தின் 2ஆவது பாடல் அப்டேட்... குஷியில் விக்ரம் ரசிகர்கள்!

துருவ நட்சத்திரம்:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ்  இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு “துருவ நட்சத்திரம்” படம் தொடங்கப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு என எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு விக்ரம் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் 2017-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம் எனவும் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஹாரிஸ் ஜெயராஜ் - கௌதம்  கூட்டவாசுதேவ் மேனன் கூட்டணியில் படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நேற்று (18/-7/2023) காலை 11 மணிக்கு இந்தப் பாடலின் ப்ரோமோ வெளியானது. இந்த வீடியோவில் துருவ நட்சத்திரம் ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என்பது போன்றாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டரில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டார். துப்பாக்கிகள் கொண்டு டைட்டில் கார்ட் போடப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, ”அவன் போறா பிளைட்டுல, இப்ப பறந்துபுட்டான் ஐட்டுல, உன்ன போட போறான் காட்டுல, அவன் கையில இன்னும் நீ மாட்டல” என பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. முழு பாடல் நாளை வெளியாகும் எனவும் இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். 

தொடரும் ஏக்கம்..!

டீசரை தொடர்ந்து “ஒரு மனம்” பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பிறகு எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாகவில்லை. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் பல ஆண்டுகள் கழித்து தான் ரிலீசானது. இதனால் ரசிகர்கள் துருவ நட்சத்திரம் படமும் வெளியாகுமா இல்லையா என குழம்பி தவித்தனர்.

தூசி தட்டப்படும் துருவ நட்சத்திரம்:

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படம் முடிவடைய உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கும் எனவும் இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை தொடங்கியதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் துருவ நட்சத்திரம் படத்தின் 2வது பாடல் "His Name is John" நாளை வெளியாகிறது. ரசிகர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யுமா என்பது நாளை தெரிய வரும். 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
தொழிலதிபர் சண்முகப்பிரியா உதயநிதி ஸ்டாலின் படத்தில் பணியாற்றியுள்ளாரா! அதிர்ச்சி பின்னணி
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இளையராஜா அவுட் ஜிவி பிரகாஷ் இன்...பாக்கெட் நாவல் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
தமிழகத்தில் மீண்டும் 6 மணி சிறப்புக் காட்சி ? திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கைக்கு விஜய் அரசு பரிசீலனை!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பில் யார் யார் கலந்துகொள்வார்கள்? லிஸ்ட் ரொம்ப பெருசு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
Embed widget