Dhanush Rolls Royce Car: ரூ.50க்கு பெட்ரோல் போடும் பால்காரர் நீதிமன்றம் வந்தாரா? தனுஷ் மீது பாய்ந்த நீதிபதி!
‛‛நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால் அதற்கான வரியை செலுத்துங்கள். மக்கள் வரிப்பணத்தில் போடப்படும் சாலையில் பயணிக்கும் போது, அதற்கான வரிசை செலுத்த வேண்டியது தானே -நீதிபதி
![Dhanush Rolls Royce Car: ரூ.50க்கு பெட்ரோல் போடும் பால்காரர் நீதிமன்றம் வந்தாரா? தனுஷ் மீது பாய்ந்த நீதிபதி! Dhanush Rolls Royce Car: Buy as many car you want but pay the full tax amount says High Court Judge Dhanush Rolls Royce Car: ரூ.50க்கு பெட்ரோல் போடும் பால்காரர் நீதிமன்றம் வந்தாரா? தனுஷ் மீது பாய்ந்த நீதிபதி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/05/a4f6782c48f80e483ada93ae5f03cdf6_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 2015ஆம் ஆண்டு காருக்கு நுழைவு வரி ரூ.60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். 50 சதவீதம் வரி செலுத்தினால் காரை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் உத்தரவிடப்பட்டது.
இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் இன்று (05/08/2021) தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.
ஏற்கனவே நடிகர் விஜய் இதே காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.சுப்பிரமணியம்,அவரது விபரங்களை மறைத்து மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தததுடன், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் படத்தில் கருத்து பேசும் நடிகர்கள், வரி செலுத்துவதில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது மாதிரியான கறார் கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். அதை எதிர்த்து விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதே நீதிபதி முன்பு இன்று தனுஷ் வழக்கு வந்தது. 50 சதவீதம் வரி செலுத்திய நிலையில் எஞ்சியுள்ள வரியை செலுத்துவதாக தனுஷ் தரப்பில் கூறி, வழக்கை வாபஸ் பெற கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது விஜய்க்கு வழங்கியது போலவே தனுஷிற்கும் கறாரான சில கருத்துக்களை நீதிபதி தெரிவித்தார், ரூ.50க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது, நீங்கள் கட்டக்கூடாதா என கேள்வி எழுப்பிய நீதிபதி, அவர் என்றாவது நீதிமன்றத்தை நாடினாரா? நீங்கள் எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால் அதற்கான வரியை செலுத்துங்கள். மக்கள் வரிபணத்தில் போடப்படும் சாலையில் பயணிக்கும் போது, அதற்கான வரிசை செலுத்த வேண்டியது தானே. என்ன பணயில் செய்கிறீர்கள் என்பதை ஏன் மனுவில் குறிப்பிடவில்லை? அது குறிப்பிட வேண்டிய கட்டாயமல்லவா என்று கடிந்து கொண்ட நீதிபதி, நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்த பின், எதற்கு வாபஸ் பெற வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார். எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என மதியம் 2:30 மணிக்குள் வணிகவரித்துறையினர் தகவல் தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Dhanush Rolls Royce Car: மனுவை வாபஸ் பெற தனுஷ் விருப்பம்: அதை ஏற்க மறுத்தார் நீதிபதி!
விசாரணையில் பகிர்ந்த சுவாரஸ்ய கருத்துக்கள்..
*திங்கட் கிழமைக்குள் நுழைவு வரி செலுத்த தயார் - தனுஷ்
*மனுவில் தான் ஒரு நடிகர் என ஏன் தனுஷ் குறிப்பிடவில்லை- நீதிபதி எஸ்.எம்.சுப்புரமணியம் கேள்வி
*யார் வழக்கு தொடர்ந்தாலும் தான் யார்? என்ன தொழில் செய்பவர் என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும்- நீதிபதி
*தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் அளிக்க வேண்டும்- நீதிபதி
*நுழைவு வரி செலுத்த தயார் என்பதை மனுவாக தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு..
*இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் நுழைவு வரி பாக்கி குறித்து வணிக வரித்துறை தனுஷுக்கு தெரிவிக்க வேண்டும்- நீதிபதி.
*மனுவை திரும்ப பெறுவதாக நடிகர் தனுஷ் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு..
*ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள்- நீதிபதி
*இன்று பிற்பகல் 2:15 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும்- நீதிபதி
*அனைவரும் பொறுப்புடனும் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்..- நீதிபதி
*பெட்ரோல் விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியர் கூட வரி செலுத்தி வருகிறார்கள்- நீதிபதி.
*கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்தில் இருந்து இறக்கு மதி செய்தார்..
Dhanush Rolls Royce Car: மனுவை வாபஸ் பெற தனுஷ் விருப்பம்: அதை ஏற்க மறுத்தார் நீதிபதி!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)