Idly Kadai ott Release : தனுஷின் இட்லி கடை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Idly Kadai ott Release : தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைபடத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் இட்லி. நித்யா மேனன் , ராஜ்கிரண் , அருண் விஜய் , ஷாலினி பாண்டே , சமுத்திரகனி , சத்யராஜ் , ஆர் பார்த்திபன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரையரங்கத்தைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது
இட்லி கடை ஓடிடி ரிலீஸ் தேதி
தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு , இந்தி முதல் ஹாலிவுட் திரைப்படங்கள் வரை ஒரு சிறந்த நடிகராக அறியப்பட்டுபவர். 2017 ஆம் ஆண்டு ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி படத்தில் தனது முதல் படத்தை இயக்கினார் . தொடர்ந்து ராயன் , நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் கடந்த ஆண்டு முதல் அடுத்தடுத்த படங்களை இயக்கி வெளியிட்டு வருகிறார் . அந்த வகையில் தனுஷ் இயக்கி நடித்து கடைசியாக வெளியான படம் இட்லி கடை. ஒருபக்கம் முழுக்க முழுக்க ஆக்ஷன் வன்முறை காட்சிகளைக் கொண்ட படங்கள் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இப்படியான நிலையில் எளிய கிராமத்து பின்னணியில் உருவான இட்லி கடை திரைப்படம் அதற்கான குறிப்பிட்ட ரசிகர்களை சென்று சேர்ந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
வரும் அக்டோபர் 29 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இட்லி கடை படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
Watch Idli Kadai on Netflix, out 29 October in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam #IdliKadaiOnNetflix@dhanushkraja @menennithya @arunvijayno1 @DawnPicturesOff _ @gvprakash @aakashbaskaran @thesreyas @dawnpicturesoff @wunderbarfilms @Netflix_INSouth https://t.co/sa8XE5UHQr
— Red Giant Movies (@RedGiantMovies_) October 24, 2025





















