மேலும் அறிய

Dhanush Aishwarya Split: காதல்.. கருத்துவேறுபாடு, விவாகரத்து.. சமரச பேச்சுவார்த்தையில் குடும்பம்.. இணையுமா நட்சத்திர ஜோடி?

இரண்டு மகன்களும் தற்போது ஐஸ்வர்யாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வர, இவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டை நீக்க குடும்பத்தினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து கொண்டிருப்பது தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து செய்திகள்தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படுபிஸியாக நடித்து வரும் தனுஷூம், யோகா, உடற்பயிற்சி, மகன்கள் என இருந்த ஐஸ்வர்யாவும் திடீரென இப்படி ஒரு முடிவை எப்படி எடுத்தார்கள் என்பதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Dhanush Aishwarya Split: காதல்.. கருத்துவேறுபாடு, விவாகரத்து.. சமரச பேச்சுவார்த்தையில் குடும்பம்.. இணையுமா நட்சத்திர ஜோடி?

காதல் முளைத்த தருணம் 

காதல் கொண்டேன் படம் வெளியான சமயம் அது. அப்போதுதான் ஐஸ்வர்யாவிற்கு அறிமுகமாகிறார் தனுஷ். அடுத்த நாளே ஐஸ்வர்யாவிடம் இருந்து பூங்கொத்து ஒன்று தனுஷின் கைகளுக்கு செல்கிறது. அதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது. 6 மாத காலம் காதலில் இவர்களின் செய்தி இரு குடும்ப வீட்டாருக்குத் தெரிய வர, ஐஸ்வர்யா தனுஷை விட 2 வயது மூத்தவராக இருந்த போதும், தம்பதியினர் உறுதியாக இருந்ததால், பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் கல்யாணம் 2004 - ல் நடந்தது. 2006 ஆம் ஆண்டு யாத்ரா பிறக்க, 2010 ஆம் ஆண்டு இராண்டாவது குழந்தையாக லிங்கா பிறக்கிறார்.

Dhanush Aishwarya Split: காதல்.. கருத்துவேறுபாடு, விவாகரத்து.. சமரச பேச்சுவார்த்தையில் குடும்பம்.. இணையுமா நட்சத்திர ஜோடி?

டைரக்டராக அறிமுகமான ஐஸ்வர்யா தனது  தனுஷை ஹீரோவாக வைத்து 3 படத்தை எடுத்தார். என்னதான் அது படம் என்றாலும், கணவனுடன் இவ்வளவு நெருக்கத்தில் மற்றொரு பெண்ணை ஐஸ்வர்யாவால் எப்படி வைத்து பார்க்க முடிந்தது என்பது கேள்வி அப்போது எழாமல் இல்லை. ஆரம்ப கால  பேட்டி ஒன்றில், ஐஸ்வர்யாவின் உறவை பற்றி தனுஷ் பகிர்ந்த போது, நாங்கள் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. 20 களின் நடுப்பகுதியில் எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதைத்தான் உங்கள் மனம் நம்புகிறது” என்று கூறியிருந்தார். ஆனால் 3 பட பிரோமோஷன் பேட்டிகளில், அவர்களுகிடையேயான உரையாடல்கள் ஒன்றுக்கொன்று முரணாகவே இருந்தது.

Dhanush Aishwarya Split: காதல்.. கருத்துவேறுபாடு, விவாகரத்து.. சமரச பேச்சுவார்த்தையில் குடும்பம்.. இணையுமா நட்சத்திர ஜோடி?

கருத்து வேறுபாடு 

2020 ஆம் ஆண்டுக்கு பிறகு தனுஷ் ஐஸ்வர்யாவுக்கிடையேயான கருத்து வேறுபாடு அதிகமானதாகவும், கதாநாயகிகளுடன் தனுஷ் நெருங்கி பழகுவது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் தனுஷ் நீண்ட நாட்களாக ஐஸ்வர்யாவை பிரிந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இரண்டு மகன்களும் தற்போது ஐஸ்வர்யாவின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வர, இவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாட்டை நீக்க குடும்பத்தினர் பல முறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் எதிலும் பலன் கிடைக்கவில்லையாம். இதனை வைத்துதான் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கீழே இணைக்கப்பட்ட ட்விட்டை போட்டதாக சொல்லப்படுகிறது.

Dhanush Aishwarya Split: காதல்.. கருத்துவேறுபாடு, விவாகரத்து.. சமரச பேச்சுவார்த்தையில் குடும்பம்.. இணையுமா நட்சத்திர ஜோடி?

இவர்களின் முடிவை கேட்ட ரசிகர்களும், தனுஷ் அண்ணாவிற்கு நாங்கள் இருக்கிறோம் என்றும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாகவும் போஸ்ட்களை பறக்க விட, உடல்நிலை சரியில்லாத ரஜினி தைரியமாக இருக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே ஐஸ்வர்யாவிடமும், தனுஷிடமும் குடும்பத்தினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்களாம். ஆனால், இருவரும் தத்தமது முடிவுகளில் உறுதியாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
PROPERTY TAX TAMILNADU : சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இன்று டார்கெட்.! இடி, மின்னலுடன் மழை- வானிலை மையம் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு இன்று டார்கெட்.! இடி, மின்னலுடன் மழை- வானிலை மையம் அலர்ட்
Rasi Palan Today (26.09.2026): பௌர்ணமியுடன் புரட்டாசி சனிக்கிழமை.. இன்று யாருக்கு ஆபத்து.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (26.09.2026): பௌர்ணமியுடன் புரட்டாசி சனிக்கிழமை.. இன்று யாருக்கு ஆபத்து.. 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
Ration Card : ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
ரேஷன் கார்டுதாரர்களே உஷார்.! பெயரை நீக்கப்போறாங்க.. இன்று இந்த சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
Embed widget