Ajay Bharath Wedding : தெய்வம் தந்த பூவே சீரியல் நடிகர் அஜய் பரத்தின் திருமண புகைப்படங்கள்..
தெய்வம் தந்த பூவே சீரியல் நடிகர் அஜய் பரத்திற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அஜய் தன்னுடைய திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த பூவே சீரியல் நடிகர் அஜய் பரத் தன்னுடைய தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிகளுக்கு பல்வேறு பிரபலங்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஜய் பரத் தெய்வம் தந்த பூவே சீரியல் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஆவணி மாதத்தில் 5 முகூர்த்த நாட்கள் உள்ள நிலையில், சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் ஆவணி மாதத்தில் திருமணம் செய்து வருகின்றனர். தலைவாசல் விஜயின் மகளும் நீச்சல் வீரங்கனையுமான ஜெயவீனாவுக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் அபராஜித்துக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சின்னத்திரையிலும் பல நடிகர்கள் தொடர்ச்சியாக திருமணங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகர் அஜய் பரத் தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் அஜய் தன்னுடைய திருமண புகைப்படங்களை, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற இத்திருமண விழாவில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர்.
அண்மையில் நடிகர் கவினின் திருமணம் நடைபெற்றது. நடிகர் கவின் தன்னுடைய நீண்ட நாள் தோழியான மோனிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்து கொள்வதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில் உடனடியாக திருமணமும் நடைபெற்றது. இந்த நிலையில் சீரியல் நடிகர் அஜய்க்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், ஃபோட்டோஸ் ஹிட்டடிக்கிறது.
மேலும் படிக்க