மேலும் அறிய

Watch Video: மகளுடன் இணைந்து அல்லு அர்ஜூனுக்கு பிறந்த நாள் வாழ்த்து.. புஷ்பா ஸ்டைலில் தெறிக்கவிட்ட டேவிட் வார்னர்!

புஷ்பா அல்லு அர்ஜூனின் மேனரிசத்தை உள்வாங்கி தன்னை புஷ்பாவாகவே உணர்ந்து நடித்தும், வீடியோக்கள் மார்ஃப் செய்து பகிர்ந்தும் டேவிட் வார்னர் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாவில் கலக்கும் வார்னர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஒருபுறம் கிரிக்கெட் மைதானத்தில் கலக்கி வருவதுடன், மற்றொருபுறம் இன்றைய 2கே கிட்ஸூக்கு சவால் விடும் வகையில் ரீல்ஸ்,  புகைப்படங்கள் என இணைய உலகிலும் கலக்கி லைக்ஸ் அள்ளி வருகிறார்.

 இன்ஸ்டாவில் சுட்டித்தனம் செய்யும் டேவிட் வார்னரின் இந்த முகத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. தனது மனைவி, குழந்தைகளுடன் குடும்பம் சகிதமாக சுவாரஸ்யமான பாடல்களுக்கு நடனமாடியும், நடித்தும் தொடர்ந்து தன் இன்ஸ்டா பக்கத்தில் டேவிட் வார்னர் வீடியோ பகிர்ந்து இணைய உலகில் கோலோச்சி வருகிறார்.

புஷ்பா அல்லு அர்ஜூனின் விசிறி!

குறிப்பாக டோலிவுட், பாலிவுட் என இந்தியப் படங்களின் தீவிர விசிறியாக இருக்கும் டேவிட் வார்னர், முன்னதாக புஷ்பா படத்தின் காட்சிகளை மார்ஃப் செய்தும், புஷ்பா மேனரிசத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அல்லு அர்ஜூன் போல் நடித்தும் இணைய உலகில் லைக்ல்ஸ் அள்ளினார்.

நடிகர் அல்லு அர்ஜூனின் தீவிர விசிறியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட டேவிட் வார்னர் முதலில் கொரோனா காலத்தில் புட்ட பொம்மா பாடலுக்கு தன் குடும்பத்துடன் க்யூட்டாக நடனமாடி லைக்ஸ் அள்ளினார்.

தொடர்ந்து புஷ்பா 1 திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி பாட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த நிலையில், இந்தப் படத்தின் பாடல்களும், நடிகர் அல்லு அர்ஜூனின் மேனரிசம் மற்றும் வசனங்களும் நாடு கடந்து வரவேற்பைப் பெற்றன.

புஷ்பாவாக மாறிய டேவிட் வார்னர்

இந்நிலையில், புஷ்பா அல்லு அர்ஜூனின் மேனரிசத்தை உள்வாங்கி தன்னை புஷ்பாவாகவே உணர்ந்து நடித்தும், வீடியோக்கள் மார்ஃப் செய்து பகிர்ந்தும் டேவிட் வார்னர் இதற்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். முதல் பாகம் ’புஷ்பா த ரூல்’ எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், இரண்டாம் பாகம் ’புஷ்பா த ரைஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இச்சூழலில் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடும் அல்லு அர்ஜூனுக்கு வாழ்த்து தெரிவித்து டேவிட் வார்னர் வீடியோ பகிர்ந்துள்ளார். 

அல்லு அர்ஜூனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

‘ஹாப்பி பார்த்டே புஷ்பா’ என டேவிட் வார்னரும் அவரது குழந்தையும் புஷ்பா மேனரிசத்துடன் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

View this post on Instagram
 
A post shared by David Warner (@davidwarner31)

அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் போஸ்டரும் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget