D50 First Look: தனுஷ் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. நேரம் குறித்த சன் பிக்சர்ஸ் - எப்போ தெரியுமா?
முன்னதாக பவர் பாண்டி என்ற படத்தை இயக்கிய 2வது முறையாக தான் நடிக்கும் 50வது படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். இதனைத் தொடர்ந்து தனுஷ் தற்போது தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் நாகார்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இதற்கிடையில் சத்தமே இல்லாமல் தனது 50வது படத்தின் பணியையும் தனுஷ் மேற்கொண்டு வருகிறார். இதற்காக திருப்பதியில் மொட்டையடித்த நிலையில் அதே கெட்டப்பில் அப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில் படம் பற்றிய எந்தவித தகவலும் இதுவரை வெளியாகாமல் உள்ளது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
Finally, it's D day🔥 @dhanushkraja's #D50FirstLook Today 6 PM ! #D50 pic.twitter.com/5DdNI6euAQ
— Sun Pictures (@sunpictures) February 19, 2024
இந்நிலையில் தனுஷின் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனாலேயே காலை முதல் சமூக வலைத்தளங்களில் #D50FirstLook என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
முன்னதாக தனுஷ் 2017 ஆம் ஆண்டு ப.பாண்டி என்ற படத்தை இயக்கினார்.இப்படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன், தீனா, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு தனுஷூக்குள் இருந்த இயக்குநர் திறமையையும் வெளிப்படுத்தியது.
இதனையடுத்து 50வது படத்தை தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்கப்போவதாக ஏற்கனவே தனுஷ் அறிவித்து விட்டார். இந்த படத்தினை தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கின்றது. மேலும் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.