மூன்று முறை திருமணம் செய்த “விஜய் டிவி” புகழ்... இன்னும் கூட திருமணம் செய்ய ரெடி என அறிவிப்பு
செப்டம்பர் 1 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலி பென்ஸியாவை திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் வைத்து புகழ் திருமணம் செய்து கொண்டார்.
பிரபல சின்னத்திரை நடிகர் புகழ் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் புகழ். அவரும் சக போட்டியாளருமான சிவாங்கி அடித்த லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதன் மூலம் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அப்படியே சினிமாவுக்குள் புகழ் நுழைந்தார். வலிமை, சபாபதி, எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் நடித்த அவர் அடுத்ததாக மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
View this post on Instagram
புகழ் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலி பென்ஸியாவை திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் வைத்து புகழ் திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேசமயம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே இருவருக்கும் கோவையில் பெரியார் படிப்பகத்தில் வைத்து திருமணம் நடந்ததாக புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.
View this post on Instagram
இந்நிலையில் புகழ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் தந்தை அன்பிற்கு ஒரு முறை... என் தாய் அன்பிற்கு ஒரு முறை...என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை...வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டாள் மேலும் ஒரு முறை தயார் .இந்தியனாக இருக்கிறேன்எல்லா புகழும் இறைவனுக்கே என தெரிவித்து என மனைவி குடும்பத்தினரின் விருப்பத்திற்காக இன்னொரு முறையும் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.