‛நான் அப்பா ஆகிட்டேன்...’ மகன் போட்டோவை போட்ட பிக்பாஸ் நடிகர்!
நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான மஹத் ராகவேந்திரா தனக்கு மகன் பிறந்த சந்தோஷத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது மனைவி மற்றும் மகனுடன் உள்ள புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். பிராச்சி மிஷ்ராவை கடந்த 2020ம் ஆண்டி திருமணம் செய்தார் மஹத் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்த மஹத் தனது கல்லுரி படிப்பை முடித்தவுடன் நடிப்புலகில் கால்பதித்தார். எஸ்.டி.ஆர் என்றால் மஹாதிற்கு உயிர் என்பது பலரும் அறிந்ததே. தனது சிறுவயது நண்பனான மஹத்தை சிம்பு தனது வல்லவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார். அதனை தொடர்ந்து காளை படத்திலும் சிம்புவோடு பயணிக்கும் மஹத்தை நம்மால் பார்க்கமுடியும்.
God has blessed us with a cute little baby boy today morning!
— Mahat Raghavendra (@MahatOfficial) June 7, 2021
Prachi & me are over joyed with this bundle of happiness.
Thank you everyone for all your love and good wishes 🤗❤️
So excited to be a dad🤩 @meprachimishra pic.twitter.com/FWrkMC82yz
காலை படத்திற்கு சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்த நேரத்தில் 2011ம் ஆண்டு வெளியான தல அஜித்தின் மங்காத்தா படத்தில் நடிக்க மஹத்திற்கு வாயப்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகின்றார் மஹத். தல அஜித்துடன் மங்காத்தாவில் நடித்தவர் தளபதியுடன் ஜில்லா படத்தில் அவர் தம்பியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவில்லை என்றபோதும் மஹத் தான் தோன்றும் கதாபாத்திரத்தை சிறப்புற நடிப்பார்.
2020ம் ஆண்டு தனது காதலி பிராச்சி மிஷ்ராவை மணந்தார் மஹத், பிராச்சி மிஷ்ரா ஒரு மாடல் அழகி. மேலும் 2012ம் ஆண்டிற்கான மிஸ் எர்த் பாகென்ட் போட்டியில் பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்பாவாக பதிவு உயர்வு பெற்ற மஹத் அந்த சந்தோஷத்தை புகைப்படத்தோடு தனது ட்விட்டர் தலத்தில் பகிர்ந்துள்ளார்.
இறுதியாக சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் தோன்றிய மஹத், தற்போது 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' என்ற சிம்புவின் பாடல் வரிகளை தலைப்பாக கொண்ட படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகின்றார். பிரபு ராம் சி இந்த படத்தை இயக்க ஐஸ்வர்யா தத்தா இந்த படத்தில் மஹத்துடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் மஹத் தமிழில் இரண்டு படங்களில் நடிக்க தெலுங்கு திரையுலகிலும் சைக்கிள் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.