தென்னிந்திய சினிமாவின் கிங்ஸ் நாங்க தான்... நான்கு மாநிலங்களின் 4 ‛நச்’ படங்கள் இவை தான்!
தென்னிந்திய சினிமாவின் ஸ்டேட் வாரியாக முன்னிலையில் இருக்கும் தற்போதைய லீடிங் திரைப்படங்களின் லிஸ்ட்
தென்னிந்திய சினிமா இதுவரையில் காணாத வளர்ச்சியை சமீப காலமாக அடைந்து வருகிறது. இது நமது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு பொற்காலமாக அமைந்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட திரைப்பட துறை தற்போது அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதற்கு உதாரணமாக சமீப காலமாக வெளியான பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்து பாக்ஸ் ஆபிஸில் ஏராளமாக வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி, தரமான திரைப்படங்கள், ஊக்குவிக்கும் ரசிகர்கள், திறமையான கலைஞர்கள், வெவ்வேறு டிஜிட்டல் தளங்கள் என பல காரணங்கள் உண்டு. தென்னிந்திய திரைத்துறையில் பெரும்பாலான திரைப்படங்கள் பான் இந்திய திரைப்படமாக வெளியாவது இதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஒவ்வொரு திரைப்படம் அந்தந்த மாநிலங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழ்நாடு - பொன்னியின் செல்வன் (2022) :
அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் இதுவரையில் வெளியான படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாட்டில் முன்னணியில் உள்ளது. அமரர் கல்கியின் சரித்திர நாவலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு படத்தின் படப்பிடிப்பின் சமயத்தில் இருந்தே உச்சியில் இருந்தது. பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் இதுவரையில் எந்த படத்திற்கும் இருந்ததில்லை.
Current Industry Hits in South Indian States
— 𝔸𝕣𝕛𝕦𝕟_ (@ArjunArju666) October 14, 2022
Kerala : #Pulimurugan (2016)
Tamilnadu : #PonniyinSelvan1 (2022)
Karnataka : #KGFChapter2 (2022)
Ap/TG : #RRRMovie(2022)
Mollywood Still Holding Since 2016 🔥🔥#Pulimurugan🐯 💥 pic.twitter.com/2OVKLdxv4F
கர்நாடக - கே.ஜி.எஃப் 2 (2022) :
கர்நாடக மாநிலத்தில் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமோகமான வெற்றியை பெற்றது. தெலுங்கு திரைப்படமாக உருவானாலும் கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி இது மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அனைத்து மாநிலத்திலும் மாஸ் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் இப்படம் தாம் தற்போது லீடிங்.
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா - ஆர்ஆர்ஆர் (2022) :
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சரியான வசூலால் கல்லா கட்டியது ஆர்ஆர்ஆர் திரைப்படம். இதுவரையில் மற்ற திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பை சாதித்து துவம்சம் செய்து கெத்தான ஒரு இடத்தில் கம்பீரமாக ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் முதலிடம் பிடித்துள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம். இந்த மூன்று படங்களுமே 2022ல் வெளியான திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா - புலிமுருகன் (2016 ) :
இருப்பினும் மாலிவுட் திரையுலகில் யாரும் அசைக்க முடியாத ஒரு வெற்றியை பெற்று கடந்த 7 ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது மெகா ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான புலிமுருகன் திரைப்படம். மற்ற திரையுலகில் சமீபத்திய படங்கள் முன்னிலையில் இருக்கும் போது இதனை ஆண்டுகளை கடந்தும் எந்த ஒரு திரைப்படத்தையும் நெருங்கவிடாமல் இன்றும் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது இந்த அதிரடியான புலிமுருகன் திரைப்படம்.