Cuckoo Actor Begging: பிளாட்பார்மில் பாட்டு பாடி பிச்சை எடுக்கும் ‘குக்கூ’ பட நடிகர்..!
கண் தெரியாததால் தன்னை கிண்டல் செய்வதாக கூறிய அவர், தனக்கு தங்க வீடு ஒன்றும், மிகப்பெரிய பாடகராக வரவேண்டும் என்றும் இளங்கோவன் கூறினார்.
‘குக்கூ’ படத்தில் நடித்த நடிகர் பிளாட்பார்மில் பாடி பிச்சை எடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ராஜூமுருகன் இயக்கி கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘குக்கூ’. இந்தப் படத்தில் தினேஷ், மாளவிகா ஆகியோர் பார்வையற்றவர்களாக நடித்திந்தனர். அதுமட்டுமில்லாமல், அவர்களுடன் படத்தில் தோன்றிய சிலரும் நிஜமாகவே பார்வையற்றவர்கள். படம் வெளியான நேரத்தில் அவர்களது நடிப்பு பற்றி நன்றாக பேசப்பட்டது. அதன்பிறகு, மற்ற படங்களில் அவர்கள் தோன்றினார்களா? முக்கிய வேடத்தில் நடித்த அவர்களது தற்போதைய நிலை என்வென்று பலருக்கு தெரியாமல் இருந்தது.
Biggboss Ultimate : பாலாவிடம் நோஸ் கட் வாங்கிய சுரேஷ் தாத்தா...! வைரலாகும் புதிய ப்ரோமோ..!
இந்த நிலையில், அந்தப் படத்தில் தினேஷ்க்கு நண்பராக நடித்த இளங்கோவன், தற்போது பல்லாவரத்தில் சுரங்கப்பாதையில் பாட்டு பாடி பிச்சை எடுத்து வருகிறார். அவரின் இந்த நிலை தற்போதுதான் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது.
அவரின் இந்த நிலைக்குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். அதில், தனது குடும்பத்தினர் தஞ்சாவூரில் இருப்பதாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்ததாகவும் கூறினார். தனக்கு வேலை இல்லை என்பதால், தன்னை திட்டியதால் குடும்பத்தாரை விட்டு பிரிந்து வந்ததாகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.
Weight Loss Inspiration : குண்டா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? போனி கபூர் மகளின் போஸ்ட் ஒரு பாடம்..
சென்னையில் பாடல் பாடி பிழைப்பு நடத்தி வந்த தனக்கு, கொரோனா ஊரடங்கால் வீட்டின் வாடகை கொடுக்க முடியாமல் சாலையோரத்தில் தங்கும் நிலை ஏற்பட்டதாகவும் தற்போது பல்லாவரத்தில் உள்ள சுரங்கப்பாதையில் பாட்டு பாடி பிச்சை எடுத்து வருவதாகவும் இதனால், மற்றவர்களுடன் சண்டை ஏற்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், கண் தெரியாததால் தன்னை கிண்டல் செய்வதாக கூறிய அவர், தனக்கு தங்க வீடு ஒன்றும், மிகப்பெரிய பாடகராக வரவேண்டும் என்றும் இளங்கோவன் கூறினார்.
இயலாதவர்களை நாம் தூக்கி சுமக்கவில்லை என்றாலும் அவர்களில் இயலாமையை கூறி துன்பப்படுத்தாமல் இருந்தால் போதும்....
Thalapathy 66 Update: `தளபதி 66’ சர்ப்ரைஸ் அப்டேட்ஸ் இருக்கு.. இந்த பட்டியல் உங்களுக்குதான்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்...