Sivaangi CWC 4 : ஷிவாங்கிக்காகத்தான் விஷால் வெளியேற்றப்பட்டாரா..? பாகுபாடு காட்டுகிறதா குக் வித் கோமாளி?
Sivaangi CWC 4 : குக் வித் கோமாளி போட்டியாளர்களிடம் பாகுபாடு காட்டும் ஒரு நிகழ்ச்சி என மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
வகை வகையான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து மக்களின் ஆல் டைம் ஃபேவரட்டாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியில் கிச்சன் சூப்பர் ஸ்டார், லிட்டில் கிச்சன் சூப்பர் ஸ்டார் போன்ற பல சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், நகைச்சுவை கொஞ்சம் தூக்கலாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பல லட்ச ரசிகர்கள் உள்ளனர்.
இதன் முதல் சீசன் 2019 ஆண்டில் ஒளிப்பரப்பாக தொடங்கியது. முதலில் குறைவான ரசிகர்களை கொண்ட இது, இரண்டாம் சீசனில் ட்ரேட் மார்க் நிகழ்ச்சியாக மாறியது. கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கி கடந்த மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமைந்தது. கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமான ரக்ஷன், இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
யார் இந்த ஷிவாங்கி?
சூப்பர் சிங்கரில் அறிமுகமாகி குக் வித் கோமாளியின் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக அனைவரையும் சிரிக்க வைத்த ஷிவாங்கி இம்முறை, போட்டியாளராக களமிறங்கியுள்ளார். சமையல் கலையின் அ ஆ இ ஈ கூட தெரியாத ஷிவாங்கி, முறையான சமையல் பயிற்சியை மேற்கொண்டு இந்த சீசனின் முதல் எபிசோடிலிருந்து கலக்கி வருகிறார். அத்துடன் இம்யூனிட்டி பேண்டையும் வாங்கியுள்ளார்.
குக் வித் கோமாளி 4ன் கடந்த எபிசோட்
கடந்த வார எபிசோடில், அட்வாண்டேஜ் டாஸ்க்கை வென்ற விச்சித்ரா மற்றும் ஆண்ட்ரியன், ஷ்ருஷ்டிக்கும் ஷ்வாங்கிக்கும் கிடைத்த டாஸ்க்கை மாற்றிவிட்டனர். இதனால், ஷிவாங்கி ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த சமையலை செய்தார். ஷ்ருஷ்டி முகுந்த வடி எனும் சிந்தி ட்ஷ்ஷை சமைத்து நடுவர்களிடம் பாராட்டை பெற்றார். பின், ஷிவாங்கியின் ஜெய்சல்மீரி ஆலு டிஷ் மொத்தமாக சொதப்பியது.
இதனால், எலிமினேஷன் சுற்றுக்குள் ஷிவாங்கி நுழைந்தார். இவருடன், சுமாராக சமைத்த எழில் எனப்படும் விஷாலும், விசில் நடிகை ஷெரினும் எலிமினேஷன் சுற்றில் போட்டி போட்டனர். இந்த எலிமினேஷன் சுற்றில் பீரோக்கி எனும் போலந்து நாட்டின் டிஷ்ஷை நன்றாக சமைத்த ஷெரின், காப்பாற்றப்பட்டார். பின் ப்ரோக்கோலி ஸ்டஃப்ட் பொட்டேடோ செய்த ஷிவாங்கியும் எலிமிமேனஷில் இருந்து தப்பித்தார். ப்ரோக்கோலி ராவியோலியை செய்து சற்று சொதப்பிய விஷால் எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த எபிசோட் ஒளிபரப்பான பின்னர், “ஷிவாங்கி மொக்கையாக சமைத்தாலும், அவரை யாரும் எலிமினேட் செய்ய போவதில்லை. குக் வித் கோமாளி போட்டியாளர்களிடம் பாகுபாடு காட்டும் ஒரு நிகழ்ச்சி. ஷிவாங்கியை தங்களின் செல்லப்பிள்ளை போல் நடத்துகின்றனர். ஷிவாங்கிகாகதான் விஷாலை எலிமினேட் செய்தனர். ஸ்ருஷ்டியை கார்னர் செய்து வருகின்றனர்.” என மக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஷிவாங்கியின் அதிரடி ட்வீட்
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஷிவாங்கி ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “நான் எப்படி இவ்வளவு நன்றாக சமைக்கிறேன் என பலருக்கும் பல குழுப்பம் உள்ளது. ஷுட்டிங்கிற்கு முந்தைய நாளில் 6-7 மணிநேரம் நான் சமைத்து பழகி வருகிறேன். நான் மட்டுமில்லை அனைத்து போட்டியாளர்களும் மெனக்கட்டு சமைத்து வருகின்றனர். சிறப்பாக சமைக்க, நாங்கள் பல தியாகங்களை மேற்கொள்கிறோம்.
கோமாளிகளும், கெட்-அப் போடுவதற்காக மெனக்கட்டு வருகின்றனர். நாங்கள் உங்களை மகிழ்விக்க கடினமாக உழைக்கிறோம். இந்த நிகழ்ச்சியின் அழகை அதன்படியே ரசியுங்கள் =. மற்றவர்களின் கடின உழைப்பை குறைத்து மதிப்பிடுவது ஒரு சுலபமான செயலாகும்.
கடவுளின் அருளால், என்னுடன் உழைப்பால் அந்நாள் சிறப்பானதாக இருந்தால் என் சமையல் சிறப்பாக அமையும். என்னுடைய உழைப்பை தாண்டி என் நாள் சிறப்பாக அமையவில்லை என்றால், நிச்சயமாக வெற்றி எனக்கு கிடைக்காது. இதுதான் வாழ்க்கையின் தத்துவம். நான் இங்கு பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் வந்துள்ளேன். நீங்களும் மகிழ்வாக இருங்கள் மக்களே" என பதிவிட்டுள்ளார்.