இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது மோசடி புகார்...பின்னணி என்ன ?
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மீது தயாரிப்பாளர் சமீர் அலிகான் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சாம் சி.எஸ்
2010 ஆம் ஆண்டு வெளியான ஓர் இரவு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சாம்.சி.எஸ். விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா திரைப்படம் இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான கைதி திரைப்படமும் பின்னணி இசையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. பாடல்களைக் காட்டிலும் பல்வேறு படங்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 படத்திற்கு பின்னணி இசையமைத்தார். புஷ்கர் காயத்ரி இயக்கிய சுழல் 1 மற்றும் 2 ஆம் பாகத்தில் முழு ஆல்பத்திற்கும் இசையமைத்திருந்தார். தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் ஆகிய மொழிகளில் பாடல்கள் மட்டும் பின்னணி இசை என இதுவரை 100 படங்கள் வரை இசையமைத்துள்ளார்.
பண மோசடி புகார்
வைரல் ஹிட் பாடல்களை தேடிக் கொண்டிருக்கும் சூழலில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார் சாம் சி.எஸ். இப்படியான நிலையில் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் அவர் மீது பண மோசடி புகாரளித்துள்ளார் தயாரிப்பாளர் சமீர் அலிகான். அவர் அளித்த புகாரில் " கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்கிற படத்திற்கு இசையமைக்க சாம் சி.எஸ் ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அவருக்கு ரூ 25 லட்சம் முன்பனமாக கொடுத்தோம். ஆனால் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் போனது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதற்கு இசையமைத்துக் கொடுக்கச் சொல்லி பல முறை சாம் சி.எஸ் இடம் முறையிட்டோம் ஆனால் அவர் இசையமைத்து தரவில்லை. வாங்கியது முன்பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்' என சமீர் அலிகான் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
Music composer Sam C.S. has been accused of taking ₹25 lakh for composing music for the film 'Tamil Paiyan Hindi Ponnu,' but failing to deliver. Producer Sameer Alikhan has filed a complaint at the Koyambedu police station, alleging he hasn't returned the money. pic.twitter.com/YyC63DEFEJ
— Ranipet Newsit (@Newsit_Ranipet) May 21, 2025




















