மேலும் அறிய

எடப்பாடியாருக்குப் பின் விஜய் தலைமை தாங்கியிருக்கலாம்...நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேட்டி

முன்னெப்போதை விடவும் விஜயின் வருகையால் இந்த தேர்தல் யாராலும் யூகிக்க முடியாத ஒரு தேர்தலாக மாறியுள்ளது என நடிகர் சிங்கமுத்து தெரிவித்தார்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தேர்தலில் யார் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றிப்பெறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடம் இருந்து வருகிறது. மற்றொரு பக்கம் இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எத்தனை சதவீதம் வாக்குகளை பெறப்போகிறது என தெரிந்துகொள்ள மக்கள் உட்பட அனைத்து கட்சியினரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

நடிகர் வடிவேலுவுடன் பல்வேறு படங்களில் நடித்த நடிகர் மற்றும் அஇஅதிமுக ஆதரவாளருமான சிங்கமுத்து யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் இந்த தேர்தலில் விஜய் வருகை குறித்து தனது கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டார். விஜய் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின் விஜய் கட்சித் தலைமை பொறுப்பை கையிலெடுத்திருக்கலாம் என அவர் இந்த பேட்டியில் கூறினார். 

விஜய் பற்றி நடிகர் சிங்கமுத்து 

நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பேசுகையில் " இந்த தேர்தல் யாருமே யூகிக்க முடியாத தேர்தலாக இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரைப் பார்க்க பெரிய கூட்டம் வருது. இதற்கு முன்பாக தேர்தலில் அவர் போட்டியிட்டு இருந்தால் அவருக்கு எவ்வளவு ஓட்டு வரும் என்று தெரிந்திருக்கும். ஆனால் அவர் தேர்தலுக்கு வருவது இதுவே முதல்முறை என்பதால் அதை யாராலும் கணிக்க முடியவில்லை. தமிழ் மக்களும் ஒரு நடிகராக அவரால் ஈர்க்கப்படுகிறார்கள்.  அதுவும் அவர் எடுத்தவுடனேயே முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். புரட்சித் தலைவரால் கூட எடுத்தவுடன் முதல்வராக முடியவில்லை. இருந்தாலும் மக்கள் அவரை முதலமைச்சராக பார்க்கவேண்டும் என்று முடிவு  பண்ணிட்டால் அதை யாராலும் எதுவும் செய்யமுடியாது. சில நேரங்களில் மிகப்பெர்ய கட்சிகள் எல்லாம் தோல்வி அடைந்திருக்கிறது. இத்தனைக்கும் கிளைச் சேயலாளர் , வட்டம் , மாவட்டம் என தொடங்கி அமைச்சர் வரை ஓவ்வொரு கட்சிக்கும் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் விஜயைப் பொறுத்தவரை யார் எங்கே இருக்கிறார் என்று மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வீட்டில் விசில் ஊதினால் மக்கள் தெரிந்துகொள்கிறார்கள். பொதுவாகவே சினிமாவில் நல்ல சீன் வந்தால் மக்கள் விசில் அடித்து பழகிட்டார்கள். விசில் அடித்தாலே மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். விசில் என்றாலே அது சவால் விடுவதுதான். அண்ணா திமுக விஜய் வரக்கூடாது என்று சொல்லாது. அடுத்த 500 வருடங்களுக்கு ஒரே கட்சி இருக்கப்போகிறதா என்றால் இல்லை. அடுத்தடுத்த தலைமுறையினர் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள். அப்படி விஜய் வந்திருக்கிறார். இந்த தேர்தலில் விஜய் எவ்வளவு வாக்குகளை பெறப்போகிறார் என்பதை பார்த்து தான் நமக்கு தெரியும். விஜயின் செயலை பார்க்காமலே அவருக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். தேர்தலுக்கு முன்பே அவர் அஇஅதிமுக வில் சேர்ந்து தனக்கு இத்தனை சீட் வேண்டும் என்று கேட்டிருந்தால் எடப்பாடியார் நிச்சயமாக கொடுத்திருப்பார். அவருக்கு பின் விஜய் இளம் தலைமுறையினரை தலைமை தாங்கியிருப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். " என்று கூறினார்

Advertisement

தலைப்பு செய்திகள்

அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை! மேடையில் கெத்து காட்டிய தனுஷ் பேசியது என்ன?
அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை! மேடையில் கெத்து காட்டிய தனுஷ் பேசியது என்ன?
Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!
Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
EPS ADMK : தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
Kia Sonet: நாட்டின் மலிவான டீசல் SUV-யில் இவ்ளோ குறைகளா? சோனெட் யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
நாட்டின் மலிவான டீசல் SUV-யில் இவ்ளோ குறைகளா? சோனெட் யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
UDHAYANIDHI VS VIJAY : காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
Embed widget