Goundamani: 85 வயதில் மனைவி ஆசையை நிறைவேற்ற துடித்த கவுண்டமணி! கடைசி வரை நிறைவேறாமல் போன கனவு!
கவுண்டமணி தனது மனைவி சாந்தியின் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்த நிலையிலும் கடைசி வரை நிறைவேறாத ஆசை பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் கவுண்டமணி:
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வாழ்ந்து வருபவர் காமெடி நடிகர் கவுண்டமணி. கோயம்புத்தூரில் உடுமலைப்பேட்டையில் பிறந்து வளர்ந்த கவுண்டமணி சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாக ஏராளமான நாடக நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். 1964 ஆம் ஆண்டு சர்வர் சுந்தரம் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகு ராமன் எத்தனை ராமனடி, தேனும் பாலும், 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் என்று ஆரம்பித்து எங்கள் ஊரு ராசாத்தி, கல்லுக்குள் ஈரம், நாட்டாமை, பக்கத்து வீட்டு ரோஜா, இளஞ்ஜோடிகள் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சாதி - மதம் பேதங்களை பார்க்காதவர் கவுண்டமணி:
கடந்த 1980 மற்றும் 90ம் ஆண்டுகளில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். கடந்த 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடத்தி வைத்தார். சாதி - மதம் போன்ற பேதங்களை பார்க்காதவர் கவுண்டமணி. எனவே தான் தனது இரு மகள்களுக்கும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த மணமகனை தேர்வு செய்தார்.

பேரன், பேத்தி எடுத்த வயதில் தான் கவுண்டமணிக்கு ஹீரோ வாய்ப்பு தேடி வந்தது. சமீப காலமாக கதையின் நாயகனாக இவர் நடித்த படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு. கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார்.
சாந்தியின் மறைவு:
கவுண்டமணி தனத் குடும்பத்தை இதுவரை வெளியுலகிற்கு காட்டாமல் வைத்திருந்தார். மேலும், அவர்களை சினிமா பக்கமே கொண்டு வரவில்லை. என்யுனும் சாந்தியின் மறைவுக்கு செந்தில், சத்யராஜ், விஜய், கேஎஸ் ரவிக்குமார் என்று சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் அஞ்சலி செலுத்தினர்.
நிறைவேறாமல் போன சாந்தியின் ஆசை:
இந்த நிலையில் தான் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் நிறைவேறாத ஆசை பற்றிய தகவல் வெளியே வந்துள்ளது. அதாவது சாந்திக்கு பிரமாண்ட வீட்டில் இருக்க வேண்டும் என்பது மிகவும் ஆசையாம். மனைவியின் ஆசையை நிறைவேற்ற தன்னுடைய 85 வயதில் கவுண்டமணியும் சென்னையில் பிரமாண்ட சொகுசு வீடு ஒன்றை தற்போது கட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வீட்டில் மனைவியோடு குடியேறுவதற்கு முன்பே சாந்தி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இவரது ஆசை நிறைவேறாமல் போயுள்ளது.





















