மேலும் அறிய

காமெடி நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் மீண்டும் திருமணம்

காமெடி நடிகர் செந்திலுக்கு  70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரத சாந்தி விழா எனப்படும் 70 வது  கல்யாணம் நடைபெற்றது.

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையில் அசத்தி, மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த காமெடியன்களாக செந்தில், கவுண்டமணி ஆகியோர் இருவருக்கும் தனி இடம் உண்டு. இவர்களுடைய காமெடி பட்டிதொட்டி எங்கும் பரவி அப்போதைய காலகட்டத்தில் பட்டைய கிளப்பியுள்ளது. அந்த வகையில், கவுண்டமணியுடன் இணைந்தும், தனியாகவும், மற்ற சிலருடன் இணைந்தும் காமெடிகளில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தவர் செந்தில். இவர் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில் கவுண்டமணியும் சேர்ந்து, அப்பாவியாகவும், குசும்புத்தனத்துடனும் நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை. அத்துடன் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் செந்தில்.

காமெடி நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் மீண்டும் திருமணம்

1951ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் நாள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூரில் பிறந்தவர் செந்தில். இவருடைய தந்தை ராமமூர்த்தி. செந்திலுக்கு முனுசாமி என்று பெயர் வைத்தார். அவருக்கு உடன் பிறந்தவர்கள் 6 பேர். அவர்களுள் செந்தில் 3வதுதாக பிறந்தவர். 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த செந்தில், தந்தை அவரை திட்டியததால், ஆத்திரத்தில் தனது 12 ஆவது வயதில் ஊரை விட்டு ஓடி வெளியேறினார். பிறகு என்ன செய்வது என்று தெரியாத அவர், முதலில், ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவர் பணியை தொடர விரும்பாமல், பின்னர் ஒரு மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். இப்படியாக பல வேலைகளை செய்த அவர், பின்னர் நாடகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது திறமைகளை வளர்த்தார்.

காமெடி நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் மீண்டும் திருமணம்

செந்தில் தனது அசாத்திய நடிப்பு மற்றும் காமெடி திறமைகளை பார்த்தவர்கள் திரையுலகத்தில் நுழைய உதவினர். அதன்படி சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர், செந்தில் நடித்த மலையூர் மம்பட்டியான் படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது, செந்திலின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பரவியது. அதைத்தொடர்ந்து, 1984 ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார் செந்தில். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. 

காமெடி நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் மீண்டும் திருமணம்

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோயிலுக்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70 வது வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு நேற்று இரவு திருக்கடையூர் கோயிலுக்கு மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்டபிரபு, ஹேமசந்திர‌ பிரபு மற்றும் மருமகள்கள், பேரக்குழந்தைகள்,  குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து கஜபூஜை, கோபூஜை செய்து  முதல்கால யாகசாலை பூஜையில் பங்கேற்று சுவாமி அம்பாளை வழிபட்டு தரிசனம் செய்தனர். 

காமெடி நடிகர் செந்திலுக்கு திருக்கடையூரில் மீண்டும் திருமணம்

அதனை தொடர்ந்து இன்று கோயிலுக்கு வந்த நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி மாலை மாலை மாற்றிக் கொண்டு மாறி மாறி இனிப்பு வழங்கி கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அமிர்தகடேஸ்வரர் குருக்கள் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து குடும்பத்தினருடன் கோயிலை சுற்றி வந்து கள்ள விநாயகரை வழிபட்டு விட்டு, அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். 60 வயது பூர்த்தி அடைந்த போது இக்கோயில் சஷ்டியப்த பூர்த்தி விழா செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Deva: சிங்கப்பூர் அதிபரின் இறுதி அஞ்சலியில் ஒலித்த தேவா பாடல்! தமிழனின் பெருமை தேனிசைத் தென்றல்!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget