Co Stars Married in Real Life:அங்கே ஆலியா-ரன்பீர்..இங்கே ஜோதிகா-சூர்யா! - சொட்டச் சொட்ட காதல் செய்த சினிமா ஜோடிகள் லிஸ்ட்
சினிமா ஸ்டார்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால் கடைக்கோடி ரசிகன் வரை எத்தனைக் கொண்டாட்டமாக இருக்கும் எனச் சொல்லியா தெரிய வேண்டும்.
![Co Stars Married in Real Life:அங்கே ஆலியா-ரன்பீர்..இங்கே ஜோதிகா-சூர்யா! - சொட்டச் சொட்ட காதல் செய்த சினிமா ஜோடிகள் லிஸ்ட் Co Stars Married in Real Life: Ajith-Shalini, Sneha-Prasanna, Surya-Jyothika Tamil Celebs Who Tied Knot With Their Co-stars Co Stars Married in Real Life:அங்கே ஆலியா-ரன்பீர்..இங்கே ஜோதிகா-சூர்யா! - சொட்டச் சொட்ட காதல் செய்த சினிமா ஜோடிகள் லிஸ்ட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/27/04a8d6fe87edf43975f4d377c0c4a36f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒரே துறையில் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டாலே அந்த அலுவலகம் அல்லோல்கலப்படும் என்னும்போது சினிமா ஸ்டார்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால் கடைக்கோடி ரசிகன் வரை எத்தனைக் கொண்டாட்டமாக இருக்கும் எனச் சொல்லியா தெரிய வேண்டும்.
View this post on Instagram
அண்மையில் பாலிவுட் சினிமா ஸ்டார்கள் ஆலியாவும் ரன்பீரும் திருமணம் செய்துகொண்டதை அடுத்து வெளியான புகைப்படங்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. ஆலியா ரன்பீர் மட்டுமல்ல, தீபிகா ரன்வீர், சயிப் அலிகான் கரீனா கபூர் என இப்படி நடிகர்கள் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட லிஸ்ட் பாலிவுட்டில் நீளம்.
View this post on Instagram
வடக்குக்கு சற்றும் சளைத்ததல்ல தெற்கு என்னும் ரகமாக நம்மூர் பக்கமும் அப்படியான க்ளாசிக் காதல் கதைகள் சினிமாவில் உண்டு. அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஒருவரை ஒரு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அஜீத் ஷாலினி, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்நேகா - பிரசன்னா, இதற்கெல்லாம் ஹைலைட்டாக தமிழ்நாட்டின் ஆல் டைம் ஃபேவரிட் ஜோடியான சூர்யா ஜோதிகா எனப் பட்டியல் பெரிசு. அண்மையில் திருமணம் நிச்சயம் செய்துகொண்ட ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி வரை இந்த பட்டியல் நீளம்.
View this post on Instagram
இதில் டாப் ஸ்டார் ஜோடிகள் அனைவருக்குமே அவர்களது ஜெராக்ஸ் காபியாக இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது கூடுதல் தகவல். ஆர்ப்பாட்டமில்லாத அழகான காதல், அதே சமயம் தங்களது இணையர்களுடன் அன்பைப் பகிர்ந்து கொள்வதை இந்த ஜோடிகள் வெளிப்படுத்தத் தவறியதே இல்லை.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)