மேலும் அறிய

Citizen Movie: ரஜினிக்கு பாட்ஷா; கமலுக்கு சகலகலா வல்லவன்; அஜித்துக்கு சிட்டிசன்... அன்றே களமாடிய அஜித் ரசிகர்கள்!

வசுந்தரா தாஸ், நக்மா, மீனா, மணிவண்ணன் எனப்  பலர் நடிப்பில் உருவாகிய இப்படத்தில் அஜித் 9 வேடங்களில் தோன்றி அசத்தியிருந்தார்.

சிட்டிசன் படம் வெளியான சமயத்தில்  நடிகர் அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்பட்டு இணையத்தில் கவனமீர்த்துள்ளன.

சிட்டிசன் படம்

2001ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியாகி பெரும் கவனமீர்த்த படம் சிட்டிசன்.

வசுந்தரா தாஸ், நக்மா, மீனா, மணிவண்ணன் எனப் பலர் நடிப்பில் உருவாகிய இப்படத்தில் அஜித் 9 வேடங்களில் தோன்றி அசத்தியிருந்தார்.

அத்திப்பட்டி எனும் மீனவ கிராமம் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டதையும் அதற்கு காரணமானவர்களை 20 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டிக்கப்படுவதையும் அடிப்படையாகக் கொண்டு உருவான சிட்டிசன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து அஜித்தின் நடிப்பு பயணத்தில் முக்கியமான படமாக அமைந்து ஹிட் அடித்தது.

ரகளையான போஸ்டர்கள்

சிட்டிசன் படம் வெளியாகி 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இன்று வரை இப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது துணிவு பட வெற்றியால் மகிழ்ச்சியாக சமூகவலைதளங்களில் களமாடும் அஜித் ரசிகர்கள், சில நாஸ்டால்ஜிக் போஸ்டர்களைப் பகிர்ந்து மகிழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னதாக சிட்டிசன் படம் வெளியானபோது அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

அதில் , எம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன்; அஜித்துக்கு சிட்டிசன் , சிவாஜிக்கு திரிசூலம்; அஜித்துக்கு சிட்டிசன், ரஜினிக்கு பாட்ஷா; அஜித்துக்கு சிட்டிசன், கமலுக்கு சகலகலா வல்லவன்; அஜித்துக்கு சிட்டிசன் என ரகளையான வாசகங்களுடன் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் தற்போது கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வருகின்றன.

Citizen Movie: ரஜினிக்கு பாட்ஷா; கமலுக்கு சகலகலா வல்லவன்; அஜித்துக்கு சிட்டிசன்... அன்றே களமாடிய அஜித் ரசிகர்கள்!

சிட்டிசன் அனுபவம் பகிர்ந்த துணை நடிகர்

இதேபோல் முன்னதாக சிட்டிசன் படத்தில் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மதுரை மோகன் என்பவர் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பகிர்ந்தது கவனமீர்த்தது.

”படக்குழுவினர் மேக் அப் போட்டு தயாராகிவிட்டார்கள். ஆனால் அஜித் மட்டும் மேக் அப் போடவில்லை. அஜித்தின் மேக் அப் அசிஸ்டெண்ட்  வரவில்லை. சிறிது நேரத்துக்கு பின் அந்த அசிஸ்டண்ட் இளைஞர் வேர்க்க விறுவிறுக்க பையோடு ஓடி வந்தார். ”இரண்டு பஸ் மாரி வருவதற்குள் லேட் ஆகிடுச்சு அண்ணா” என அஜித்திடம் சொன்னார்.

தொடர்ந்து ”உங்களிடம் பைக் இல்லையா?” என அஜித் கேட்டார். அதற்கு இல்லை என அந்த இளைஞர் பதில் கூற, பைக் ஓட்டத் தெரியுமா என அஜித் விசாரிக்கத் தொடங்கினார். அதன் பின் அஜித் மேக் போட ஷூட்டிங் தொடங்கியது. தொடர்ந்து அன்று மாலை பேக் அப் சொல்லி கிளம்பும் நேரத்தில் “நாளைக்கு மேக் அப் பாய் லேட்டா வருவாரா” என தன் மேனேஜரை விசாரித்துவிட்டு கூப்பிட்டார்.

அதன் பின் சிறிது நேரத்தில் திடீரென ஒரு புது ஹீரோ ஹோண்டா பைக் செட்டுக்கு வந்திறங்கியது. அதனை அந்த மேக் அப் போடும் நபரை அழைத்து அவரிடம் கொடுத்து, “இந்த பைக்க வச்சிக்கோ. இனிமேல் பைக்ல வா, பைக்ல போ. வேற எதுலயும் வராத” என்றார்.

தொடர்ந்து  உடனடியாக அந்த இளைஞர் அஜித்திடம் மீண்டும் சாவியைக் கொடுத்தார். அதற்கு அஜித்  “ஏண்டா என்ன ஆச்சு?” எனக் கேள்வி கேட்க, அந்த இளைஞர் ”அண்ணா, முதன்முறையா சாவி தரீங்க.. ஆசிர்வாதம் வாங்கிக்கறேன்” எனக் கூறி காலில் விழுந்தார்.

அதற்கு முதுகில் அடித்து, ”எந்திரி...இதெல்லாம் எனக்கு  பிடிக்காது. இந்தா பைக் ஓட்டு” என்றார் அஜித். நாங்கள் இதையெல்லாம் நேரில் பார்த்து வியந்திருக்கிறோம்” எனப் பேசினார்.

மதுரை மோகனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்குPawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"டெல்லியா இருந்தாலும்.. Local-ஆ இருந்தாலும் 2026 திமுக தான்" துணை முதல்வர் உதயநிதி அதிரடி
CM MK Stalin:
CM MK Stalin: "35 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு! 10 ஆயிரம் குடும்பங்கள் பயன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Anbil Mahesh: மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியது ஏன்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Breaking News LIVE 5th NOV 2024: 2026ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
Kasthuri:
Kasthuri: "நடிகை கஸ்தூரி மீது பாய்ந்தது வழக்கு" 4 பிரிவுகளில் FIR போட்ட போலீஸ்!
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
TN Rain Alert: உஷார்! நாளை 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - உங்க ஊரு வானிலை எப்படி?
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Amaran: இறுக்கமாகும் துப்பாக்கியின் பிடி! சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற அமரன்!
Aishwarya Rajinikanth:மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
Aishwarya Rajinikanth:மயிலம் முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
Embed widget