மேலும் அறிய

Ajith Documentary: ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு.. ஆவணப்படமாகும் அஜித்தின் உலக சுற்றுலா..!

நடிகர் அஜித் வேர்ல்ட் டூர் செல்ல இருப்பதை பிரபல ஒளிப்பதிவாளரான நீரவ்ஷா படம் பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டாக்குமெண்டரியாகுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.   

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்த ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். சினிமா நடிகராக இருந்தாலும் பைக்கிங் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர். இது உலகறிந்த ஒரு விஷயம் தான். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வங்கி கொள்ளையை மையமாக வைத்து வெளியான 'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஷெட்யூல் முடிந்த பிறகு அவரின் நீண்ட நாள் ஆசையான பைக்கிங் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டன. 

 

Ajith Documentary: ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு.. ஆவணப்படமாகும் அஜித்தின் உலக சுற்றுலா..!

அஜித் வேர்ல்ட் டூர் :

நடிகர் அஜித் வேர்ல்ட் டூர் செல்ல வேண்டும் என்ற ஆசையின்  முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பைக்  மூலம் தனது பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொண்டார். லடாக்கில் பயணத்தை தொடங்கிய சமயத்தில் அவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட வீடியோ, ரசிகர்களிடம் பேசிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அதனை தொடர்ந்து தனது இரண்டாவது கட்ட பைக்கிங் சுற்றுப்பயணத்தை விரைவில் மேற்கொள்ள போவதாக அறிவிப்பின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார். தற்போது நடிகர் அஜித், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கும் AK62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்த பிறகு இரண்டாவது சுற்றை தொடங்குவதாக தெரிவித்து இருந்தார். 

ஆவணப்படம்:

அஜித்குமார் பிறந்தநாளான இன்று புதிய தகவல் ஒன்று வெளியாகி அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. அஜித் குமார் தனது உலக சுற்றுப்பயணத்தை கேமராவில் பதிவு செய்ய விரும்புகிறார். அது  தனது வாழ்நாள் சாதனையாக அமைய வேண்டும் என ஆசைப்படுகிறார்.  அதனால் பிரபல ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா அவருடன் பயணத்தில் ஈடுபட உள்ளார்.

சுற்றுப்பயணத்தின் ஒவ்வொரு பகுதியையும் நீரவ் ஷா சிறப்பாக படம் பிடிக்க முடியும் என்பதால் அவருடன் உடன் பயணிக்க உள்ளார். அஜித்தின் முதற்கட்ட சுற்றுப்பயணத்தின் காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே எடிட் செய்யப்பட்டு அதை தனது குடும்பத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

 

Ajith Documentary: ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு.. ஆவணப்படமாகும் அஜித்தின் உலக சுற்றுலா..!

டாக்குமென்டரியாகும் உலக பயணம்: 

அஜித்தின் சுற்றுப்பயண காட்சிகள் டாக்குமென்டரியாக மக்கள் பார்வைக்கு வெளியிடப்படுமா இல்லையா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அஜித் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பதிவுகளை வெளிப்படையாக வெளியிட விரும்பவில்லை. ஒரு வேளை அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு நாள் அஜித் உலக சுற்றுப்பயணத்தின் வீடியோவை வெளியிடவும் முடிவு செய்யக்கூடும். இருப்பினும் அதற்கான சாத்தியம் தற்போது வரை இல்லை என கூறப்படுகிறது. 

AK62 அப்டேட் : 

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் AK62 படத்தின் படப்பிடிப்பு  ஜூன் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் பிறந்தநாளை முன்னிட்டு AK62 படம் குறித்த அப்டேட் ஏதாவது வெளியிடப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள். 
 

தலைப்பு செய்திகள்

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஜெயிலர் 2 டிக்கெட் இலவசம்...தஞ்சையில் புதிய முயற்சி
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? கணவனுக்கே ஷாக் தந்த ஜோதிடர்! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..
Karthigai Deepam: ரேவதிக்கு மீண்டும் கல்யாணமா? கணவனுக்கே ஷாக் தந்த ஜோதிடர்! கார்த்திகை தீபத்தில் திக்.. திக்..
தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தளபதி படத்தில் இருந்து வந்த பெயர்.. எஸ்.ஜே. சூர்யா சொன்ன சுவாரஸ்ய தகவல்!
ரூமுக்கு வந்தா வாய்ப்பு தர்றேன்.. பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. தென்னிந்திய சினிமாவுக்கு கும்பிடு!
ரூமுக்கு வந்தா வாய்ப்பு தர்றேன்.. பாலிவுட் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. தென்னிந்திய சினிமாவுக்கு கும்பிடு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget