மேலும் அறிய

மதுரைக்கு மட்டுமில்ல... இது, தென் மாவட்டத்திற்கே இது குட் நியூஸ் - எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தீவிரம் !

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை லட்சக்கணக்கான செங்கலால் இன்றைக்கு கட்டடம் வான் உயர்ந்து நிற்கிறது. - திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., பேட்டி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா ஆய்வு செய்து பேட்டி.

 
தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை
 
மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைவதால், இதன் கட்டுமானப் பணிகளைத் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆய்வு செய்தார் அவரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் அனுமந்தராவ் வரவேற்றார்.  இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக நடைபெற்று வரும் கல்வி வளாகம் (Academic Block), நிர்வாகக் கட்டடம் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) ஆகியவற்றின் பணிகளை அவர்  பார்வையிட்டு  அதிகாரிகளுடன் விவரம் கேட்டறிந்தார். வி.வி.ராஜன் செல்லப்பா கூறியதாவது...,” மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்ட பணி, இரண்டாம் கட்ட பணி என இரண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் மறுமலர்ச்சியாக  இருக்கும். 
 
மதுரைக்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான்.
 
எய்ம்ஸ் மட்டும் இல்லாமல் அதை சுற்றி இருக்கும் பகுதிகளையும்  முன்னேற்றம் அடையும். ஈ.பி.எஸ், பிரதமரும் சேர்ந்து தொடங்கி வைத்த இந்த திட்டம்  தொடர்ந்து 21 கட்டடங்கள்  நடைபெற்று வருகிறது  இதில் 11 மாடி கொண்ட மருத்துவமனை கட்டடம் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்ட பணியில் சில கட்டடங்கள் முடியும் தருவாயில் உள்ளது. இதில் மார்ச் மாதம் இறுதியில்ராமநாதபுரத்தில் பயிலும் மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்கு இருக்கும் சிஎஸ்ஆர்  நிதி போல இதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை சுற்றி உள்ள 20 கிராமங்கள் கல்வி நிலையங்கள் ,ஊராட்சிகளுக்கு உதவி செய்ய எய்ம்ஸ்  நிர்வாகம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பாக தோப்பூர் ஊராட்சிக்கும் 2 கோடி, வேடர் புளியங்குளம் ஊராட்சிக்கும் 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு சேர்மனாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அவர்  ஒப்புதல் அளித்தால் உடனடியாக நிதி அளிக்க தயாராக உள்ளோம் என்று எய்ம்ஸ் நிர்வாகம் கூறியுள்ளார்கள். இந்த நிதி வரும் பொழுது சுற்றுவட்டார பகுதிகள் வளர்ச்சி. அடையும் ஒரு செங்கலை காண்பித்து அரசியல் செய்தார்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு லட்சக்கணக்கான செங்கலால் இன்றைக்கு கட்டடம் வான் உயர்ந்து நிற்கிறது . இந்த கட்டடம் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மதுரைக்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான்.
 
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடப்பாடியார் 225 ஏக்கர் நிலத்தினை வழங்கினார் 
 
 இதன் முதல் கட்ட  திறப்பு விழாவின் போது எடப்பாடியார் முதலமைச்சராக இருப்பார், அப்போது பாரதப் பிரதமரும் எடப்பாடியாரும் சேர்த்து திறந்து வைப்பார்கள். கடந்த எடப்பாடியார் ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த ஐந்து ஆண்டில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட திமுக அரசு கொண்டுவரவில்லை. எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்திலேயே பிரதமரும் முன்னாள் முதல்வரும் உரையாற்ற இருக்கிறார்கள். கட்டடப் பணிகள் மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் 2600 ஊழியர்கள் இங்கு தங்கியிருந்து பணிபுரிகிறார்கள். மார்ச் இறுதிக்குள் ஹாஸ்டல் முடிக்கப்படும். கட்டடங்கள்  வானலாவிய கட்டடங்களாக உயர்ந்து வளர்கின்றது. அதற்காக நாம் வாழ்த்துவோம். இந்த இடத்திற்கு கட்டுமானமே வித்தியாசமான முறையில் நடைபெறும். வீடு கட்டுவது போல் இல்லை. நம்பிக்கையூட்டும் அளவிற்கு செய்து இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். இந்த பணி முடியும் போது இந்த இடமே வித்தியாசமாக இருக்கும். மதுரை மாவட்டத்திற்கு கிடைத்த அரிய வாய்ப்பு. அது முழுமை அடைய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இன்னும் அதிகபட்சம் போனால் இரண்டு ஆண்டுகள் சொல்லியிருக்கிறார்கள் 2028 ஆம் ஆண்டு முழுமை அடைந்து பயன்பாட்டிற்கு வரும்.  இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடப்பாடியார் 225 ஏக்கர் நிலத்தினை வழங்கினார்  தேவைப்பட்டால் விரிவாக்கம் செய்யப்படும்.
 
எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாப்புடன்
 
34 வகையாக திட்டபணிகளில்  நடைபெற்று வருகிறது. ஐந்து வகை முடிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ராமநாதபுரத்தில் இறுதி ஆண்டு பிடிக்குமானவர்கள் மதுரையில் வந்து தங்கி  படிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. பணி சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. தீயணைப்பு, சுற்றுச்சூழல், குடிநீர் என அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மதுரை எய்ம்ஸ் குறித்து நான்கு முறை கடிதம் எழுதி இருக்கிறேன். அவர்கள் எனக்கு பதில் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக பணிகளை அவசர கோலத்துடன் திறக்க கூடாது. ஏற்கனவே மதுரை கோரிப்பாளையம் பாலம் அவசர கோலத்தில் திறக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்று மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கூறினார். 

தலைப்பு செய்திகள்

" திமுக செஞ்ச துரோகத்தால தான் ஆட்சியே போச்சு " - எடப்பாடியை கழட்டி விட்ட பூவை ஜெகன் மூர்த்தி
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget