மேலும் அறிய

இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?

கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத தேமுதிக இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் யாருடன் கூட்டணி வைக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் ஒவ்வொரு கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திமுக - அதிமுக - தவெக - நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டிகள் இந்த தேர்தலில் உருவாகியிருப்பதால் இந்த தேர்தல் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தேமுதிக யார் பக்கம்?

திமுக தனத கூட்டணியை வலுவாக வைத்துள்ள நிலையில், அதிமுக தனது கூட்டணியை கடந்த மாதம் வலுவாக்கியது. தவெக தனித்தே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்தலில் தேமுதிக யார் பக்கம்? என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது. 

திமுக - அதிமுக என்ற இரண்டு கட்சியினரிடமும் தேமுதிக-வினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், தேமுதிக-வின் நிபந்தனைகளை ஏற்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சியினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். 

தொடர் சறுக்கல்:

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முதல் தேமுதிக சறுக்கல்  பாதையிலே இருந்து வருகிறது. விஜயகாந்த் உடல்நலக்குறைவான முதலே தேமுதிக திக்குமுக்காடி வருகிறது. அவரது மறைவிற்கு பிறகும் விஜயகாந்த் மீதான மரியாதையால் அந்த கட்சிக்கு தொண்டர்கள்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்த தேர்தலில் தேமுதிக தங்களது வாக்கு சதவீதத்தை தக்க வைத்தால் மட்டுமே அவர்களால் தங்களது கட்சியினர் மத்தியில் நம்பிக்கையை விதைக்க இயலும். முரசு சின்னத்தை தக்க வைப்பதற்காக அவர்கள் 8 தொகுதிகளில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளனர். அதற்கு தேமுதிக இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டியது கட்டாயமாக உள்ளது. 

இரட்டை இலக்கத்திற்கு போராட்டம்:

ஆனால், அவர்களுக்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இரண்டுமே இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க தயாராக இல்லை. தற்போது திமுக-வின் கூட்டணி கதவு பெரும்பாலும் அடைத்துவிட்ட நிலையில், அதிமுக பக்கம் மட்டுமே சாத்தியமாக உள்ளது. ஆனால், அதிமுக-வில் இரட்டை இலக்கம் என்பதும் சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது. 

வட தமிழகத்தில் ஓரளவு வாக்கு சதவீதத்தை தற்போதும் தக்கவைத்துள்ள தேமுதிக, அதிமுக கூட்டணிக்கேச் சென்றாலும் அவர்களுக்கு அதிகபட்சம் 6 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க வாய்ப்புகள் உள்ளது. அரசியல் களத்திற்கு புதியதாக வந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்தால் தேமுதிக-விற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். ஆனால், வெற்றி வாய்ப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என்பதே களநிலவரம்.

பிரேமலதா முடிவு என்ன? 

கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக உயர்ந்த தேமுதிக, அடுத்து நடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் ஒரு தொகுதிகளில் கூட எம்.எல்.ஏ.க்கள் இல்லாத பரிதாப நிலையில்  உள்ளது. இதனால், இந்த தேர்தலில் தங்களுக்கென சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டிய கட்டாய்திலும் தேமுதிக உள்ளது. 

பிரேமலதா விஜயகாந்த்  கூட்டணி தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்போகிறார்? கட்சியின் எதிர்கால நலன் கருதி அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்? என்பதும் மிகப்பெரிய கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
ABP NADU Exclusive: ஒரே தொகுதியில் தொடர் வெற்றி.. விராலிமலை செல்லப்பிள்ளை விஜயபாஸ்கரின் சக்ஸஸ் ஃபார்முலா!
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
Embed widget