Cinema Headlines: மாஸ்டர் சுரேஷ் எனும் சூர்யகிரண் மறைவு: ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படங்கள்: சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: கோலிவுட் வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.
எகிற வைத்த எதிர்பார்ப்பு.. ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்..முழு விபரம் இதோ!
2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் இதில் போட்டிப் போட்டு விருதுகளை வென்ற படங்களின் முழு விபரத்தை காணலாம். சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 1929 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே 96வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி திரையரங்கில் நடைபெற்றது. மேலும் படிக்க
ஆஸ்கர் விருது விழாவில் உண்மையில் நிர்வாணமாகத் தோன்றினாரா ஜான் சீனா?
Oscars 2024: பிரபல WWF மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா (John Cena) ஆஸ்கர் விருது விழாவில் செய்த செயல் தான் இன்றைய ஹாட் டாப்பிக். ஆஸ்கர் விருதுகள் எனப்படும் அகாடமி விருது விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலை 4.30 மணிக்குத் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இன்றைய ஆஸ்கர் விருது விழாவில் பெஸ்ட் காஸ்ட்யூமுக்கான விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ஜான் சீனா செய்த செயல் கவனம் ஈர்த்து சிரிப்பலை மற்றும் அதிர்ச்சியை அங்கு உண்டு பண்ணியது. மேலும் படிக்க
‘மௌன கீதங்கள்’ மாஸ்டர் சுரேஷ்.. இயக்குநர் சூரிய கிரண் காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!
திரைத்துறையில் சமீப காலமாக அடிக்கடி பிரபலங்களின் மரணங்கள் செய்தி திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மௌன கீதங்கள், படிக்காதவன்,மை டியர் குட்டி சாத்தான், முந்தானை முடிச்சு போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஈர்த்தவர் மாஸ்டர் சுரேஷ் (Master Suresh). தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் படிக்க
மஞ்சும்மல் பாய்ஸ் சுபாஷ் உயிரைக் காப்பாற்றிய பெல்ட்: இயக்குநர் பகிர்ந்த சீக்ரெட்!
சிதம்பரம்.எஸ்.பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel Boys). தமிழில் இப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று இப்படத்தில் படக்குழு நிச்சயமாக எதிர்பார்த்திருக்காது. மலையாள சினிமாவில் வரலாற்றில் அதி விரைவில் ரூ.100 கோடி வசூல் ஈட்டிய முதல் படம் என்கிற வரலாற்றை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. தற்போது உலக அளவில் இப்படம் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஒப்பன்ஹெய்மர் படம் - ரசிகர்கள் மகிழ்ச்சி
2024 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் படம் பல பிரிவுகளில் விருதை வென்றுள்ளது. கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓப்பன்ஹெய்மர் படம் வெளியாகியது. அணு ஆயுதத்தை முதல் முறையாக கண்டுபிடித்த ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. மேலும் படிக்க
அடையாளமே தெரியல.. ப்ரித்விராஜ் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோன பிரபாஸ்
ஆடு ஜீவிதம் படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று ப்ரித்விராஜூக்கு நடிகர் பிரபாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'தி கோட் லைஃப்' (The Goat Life). தேசிய விருது வென்ற ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் , மலையாளம் , இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ப்ரித்விராஜ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் படிக்க