Cinema Headlines: கீர்த்தி சுரேஷின் இந்தி பட அப்டேட்.. பிக்பாஸ் டைட்டில் வென்ற அர்ச்சனா.. சினிமா ரவுண்ட் -அப் இன்று!
Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பொங்கல் படங்களில் வசூலை வாரிக்குவிப்பது எந்த படங்கள் என பார்க்கலாம். மேலும் படிக்க
நேத்து "இந்தி தெரியாது போயா" இன்று இந்தி பட அப்டேட்: கீர்த்தி சுரேஷை வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!
அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிக்கும் முதல் இந்தி படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. கோலிவுட், டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் , ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, ஜோதி தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். மேலும் படிக்க
மாஸ் காட்டிய மகேஷ்பாபு.. வசூலை வாரி குவிக்கும் “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனம் இதோ..!
இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் - நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆந்திரா மாநில ரசிகர்களிடையே மிகப்பெரிய வசூலை அள்ளியுள்ளது. இதனிடையே “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனத்தை காணலாம். மேலும் படிக்க
விஜயகாந்தை நினைத்து வடிவேலு வீட்டில் அழுதிருக்கலாம் - நடிகர் சரத்குமார் கருத்து
ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த வாய்ப்பு தான் விஜயகாந்துடன் நட்பை தொடர வைத்தது என நேர்காணல் ஒன்றில் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். நடிகரும், தேமுதிக தலைவரும் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு பலருக்கும் பெரிதும் நீங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். மேலும் படிக்க
அடேங்கப்பா.. டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் சம்பளம் தெரியுமா? அள்ளிக்கொடுத்த பிக்பாஸ்!
இறுதியில் கடைசி வாரத்தில் ஐந்து பேர் ஃபைனலிஸ்ட்டாக தேர்வாகினர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இதில், அதிக வாக்குகள் பெற்று அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 28ஆவது நாளில் அவர் வீட்டிற்கு நுழைந்தார். மேலும் படிக்க