மேலும் அறிய

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?

TNPSC Group 2 2A Result 2024: செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இன்று (டிச.12) வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று (டிச.12) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுகள் நடத்தப்பட்டு, 57 நாட்களிலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

தேர்வர்கள், https://tnpscresults.tn.gov.in/ அல்லது https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம். 

செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த தேர்வு

குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியான அறிவிப்பில், 2,327 காலி பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது.  இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 2.50 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

காலியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரிப்பு

தொடர்ந்து காலி இடங்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. திருத்தப்பட்ட பணிகளின் அடிப்படையில் வனத்துறையில் வனவர் பணி இடங்கள் 121 ஆகவும், குற்ற விசாரணைத் துறையில் 22 பணி இடங்கள் ஆகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் 3 ஆகவும், தொழிலாளர் துறையில் 16 ஆகவும், சட்டத் துறையில் 6 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

மொத்தமாக குரூப் 2 தேர்வுக்கு 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டதால், மொத்த காலியிடங்கள் 2,327-ல் இருந்து 2 ஆயிரத்து 540 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 


TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  1. தேர்வர்கள், https://tnpscresults.tn.gov.in/ அல்லது https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
  2. அதில், குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஆகிய இரண்டு இணைப்புகள் தோன்றும்.
  3. அதை க்ளிக் செய்து, தனித்தனியாகத் தேர்வு முடிவுகளைக் காணலாம். 

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், டிசம்பர் 18ஆம் தேதிக்குள் முதன்மைத் தேர்வுக் கட்டணமான ரூ.150 தொகையை இணையம் மூலம் செலுத்த வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget