TN Rain Update: 13 மாவட்டங்களில் கனமழை - இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? முழு லிஸ்ட் இதோ..!
TN Rain Update: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
TN Rain Update: சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக,
13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16.12.2024: தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17.12.2024: கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18.12.2024: செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமானது முதல் தீவிரமழை காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்வதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகவும் சில மாவட்டங்களில் இன்று கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கரூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, அரியலூர், திருவாரூர், தருமபுரி, நாகை, திருப்பூர், நாமக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, தென்காசி, விழுப்புரம், திருச்சி , நெல்லை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.