மேலும் அறிய

Trichy Suriya on Annamalai | "விரைவில் அண்ணாமலை FILES" பகீர் கிளப்பும் திருச்சி சூர்யா பரபரக்கும் தமிழக பாஜக

திமுக செய்ததாகக் கூறப்படும் ஊழல்கள் அடங்கிய விவரங்களை DMK Files-3 என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தயாரான நிலையில், அண்ணாமலை செய்ததாகக் கூறப்படும் ஊழல்கள் அடங்கிய விவரங்களை அண்ணாமலை Files-1 என்ற பெயரில் திருச்சி சூர்யா வெளியிடுவதாக தெரிவித்துள்ளது பாஜக தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்தவரின் மகன் பாஜகவில் இணைந்தது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.திருச்சி சூர்யா பாஜக பெண் நிர்வாகி டெய்சி சரணுடனான கருத்து மோதலின் போது அவரை ஆபாசமாக பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதைத் தொடர்ந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யா 6 மாதத்துக்கு நீக்கப்பட்டார். பின்கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் திருச்சி சூர்யா பாஜகவில் சேர்க்கப்பட்டதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மற்றும் சூர்யா சிவா பேசும் ஆடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைமையை விமர்சித்த தமிழிசையை கடும் விமர்சனம் செய்திருந்தார் திருச்சி சூர்யா. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டார். 

இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், திமுக ஃபைல்ஸ் முதல் பாகத்தை அண்ணாமலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 3 மாதங்கள் கழித்து திமுக ஃபைல்ஸ் இரண்டாவது பாகத்தை வெளியிட்டார். அதில், அரசுத் துறைகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், DMK Filesஇன் மூன்றாவது பாகத்தை முழுவதுமாக ஜனவரி மாதம் வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் திருச்சி சூர்யா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலை பைல்ஸ்-1 வெளியிடப்படும். இதில் நானே என் தனிப்பட்ட முயற்சியில் சேகரித்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன். ஊழலை ஒழிப்பேன் என்ற பெயரில்,  ஊழல் பேர்வழிகளிடம் மிரட்டி  பணம் பறித்து சொத்து சேர்த்த விவரங்கள் மற்றும் அண்ணாமலையை அண்டி பிழைத்து சமீபத்தில் பணக்காரர்களான அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள்,கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவரங்கள் இந்த ஃபைல்சில் கண்டிப்பாக இடம்பெறும் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளது பஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget