Cinema Headlines: பொங்கல் ரிலீஸூக்கு தயாரான கோலிவுட்.. ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்ட அன்னபூரணி.. சினிமா ரவுண்ட்அப்!
Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாராவின் அன்னபூரணி!
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல்ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்ற இப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த டிச.29ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் அன்னபூரணி திரைப்படம் ஆண்டி இந்து திரைப்படம் என்றும் லவ், ஜிஹாத் பிரச்னையை இத்திரைப்படம் ஊக்குவிப்பதாகவும், இப்படத்தின் மீதும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஜீ ஃபைவ் நிறுவனங்களின் மீதும் மும்பை காவல்துறையிடம் முன்னாள் ஷிவசேனா தலைவர் ரமேஷ் சொலான்கி புகாரளித்திருந்தார். மேலும் படிக்க
ஜெயராம் பட இயக்குநர் காலமானார்... சோகத்தில் மலையாள திரையுலகம்...
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இரட்டை இயக்குநர்கள் சுரேஷ் மற்றும் வினு. இவர்கள் இருவரும் இணைந்து மங்களம் வீட்டில் மனசேஸ்வரி, ஆயுஷ்மான் பவா உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். 1995ம் ஆண்டு ஜெயராம், வாணி விஸ்வநாத் நடிப்பில் வெளியான மங்களம் வீட்டில் மனசேஸ்வரி திரைப்படம் மூலம் தான் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் வினு. மேலும் படிக்க
29 ஆண்டுகளில் முதல்முறை .. மிஷன் சாப்டர் 1 படத்தால் அருண் விஜய் மிகுந்த மகிழ்ச்சி.. ஏன் தெரியுமா?
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே . இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள நிலையில் மகாதேவ் கதை எழுதியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் , ஸ்ரீ ஷீரடி சாய் மூவிஸ், நியூ மார்ச் ஃபாஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் ஆஸ்பென் ஃபிலிம் புரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.இந்த படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 12) வெளியாகிறது. மேலும் படிக்க
சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கு - புது பிசினஸ் குறித்து மனம் திறந்த நடிகை நயன்தாரா!
தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்திலேயே, அப்போது முன்னனி நடிகராக இருந்த சரத்குமாருடன் சேர்ந்து நடித்தார். இதனை அடுத்து, ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நடித்தார். தொடர்ந்து, சூர்யா, விஜய், அஜித்குமார் என தொடங்கி அடுத்த 10 வருடங்களில் வளர்ந்த ஹீரோக்களாக மாறிய ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என அனைவருடனும் சேர்நது நடித்து விட்டார். மேலும் படிக்க
விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ் நாளை ரிலீஸ்.. இந்த காரணத்துக்காகவே தியேட்டரில் பார்க்கலாம்..!
நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படத்தை ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதை காணலாம். பாலிவுட்டில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் மேரி கிறிஸ்துமஸ். ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் ப்ரீதம் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் ஆகியோரும் தமிழ் பதிப்பில் நடித்துள்ளனர். மேரி கிறிஸ்துமஸ் படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 12) வெளியாகவுள்ளது. மேலும் படிக்க
கேப்டன் மில்லர் எப்படி இருக்கும்? - நடிகை விஜி சந்திரசேகர் சொன்ன தகவல்.. எகிறும் எதிர்பார்ப்பு
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அதிதி பாலன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 12 ஆம் தேதி) ரிலீசாகவுள்ளது. மேலும் படிக்க