Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Dhanusu New Year Rasi Palan: தனுசு ராசிக்காரர்களுக்கு புத்தாண்டான 2025ம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு 2025 தொழில் ரீதியான சில மாற்றங்களையும் கடன் கிடைத்தல் போன்ற செயல்பாடுகளும் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் முழுவதுமாக உங்களால் நீங்கள் நினைத்தது சாதிக்க முடிந்தது என்றால், அது சந்தேகமே. ஆனால் 2025 இல் என்ன மாதிரியான மாற்றங்கள் உங்களுக்கு நடைபெறப் போகிறது என்பதை பார்க்கலாம்....
குரு பெயர்ச்சி:
பிப்ரவரி 7ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை நோக்கி குரு பகவான் பயணம் செய்வது சிலருக்கு நல்ல காதல் யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும். சிலருக்கு நல்ல உத்தியோகம் முன்னேற்றத்தை கொண்டு வந்திருக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவதற்கு சுலபமான வழி ஐந்தாம் இடத்தில் இருக்கும் குருவால்தான். புத்திர பாக்கியத்திற்கு தடை இருந்தால் அதை நீக்கும் வல்லமை ஐந்தாம் இடத்து குருவுக்கு நிச்சயமாக உண்டு. பிப்ரவரிக்கு பிறகு மே மாதம் வரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு சம்சாரம் செய்கிறார்.
இது தொழிலுக்கு மிக சிறப்பான அமைப்பு. உங்களை நம்பி எவ்வளவு முதலீடு செய்தாலும் அதை வெற்றிகரமாக லாபகரமாக மாற்றி தருவதில் நீங்கள் வல்லவர். 2025 முதல் பகுதி அப்படித்தான் இருக்கப் போகிறது. கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். நினைத்த காரியம் நடைபெறும் அளவிற்கு சக்தியை உருவாக்கும். எதிரிகள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை உங்களுக்கு உருவாக்கினாலும், அதிலிருந்து நீங்கள் சுலபமாக விடுபடுவீர்கள். புதிய ஆற்றல் தெம்பும் பிறக்கும்.
ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் குரு:
குருவானவர் உங்களுடைய ராசியை ஏழாம் வீட்டில் இருந்து நேரடியாக பார்வையிடப் போகிறார். இதைவிட அற்புதமான ஒரு கிரக அமைப்பு இருக்க முடியாது. ஐந்து வருடங்கள் கடந்து விட்டது எனக்கு திருமணத்திற்கான வாய்ப்புகளே கிடைக்காதா? என்று இருக்கும் அத்தனை வரன்களுக்கும் இதோ ஏழாம் இடத்தில் திருமணம் செய்து வைக்க வந்திருக்கிறார். உங்களுக்கான நல்ல வரனை வாயில் தேடி வர வைப்பார். நீங்கள் பார்த்த வரன்களாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் பார்த்த வரன்களாக இருந்தாலும் சரி, சுமூகமான இரு வீட்டார் சம்மதத்தோடு நல்லபடியாக திருமணம் நடைபெறும். ஏழாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் உங்களின் 11 ஆம் வீட்டை பார்ப்பது, மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும். அது மட்டுமல்லாமல் பணப்பழக்கத்தை இருந்து கொண்டே செய்யும் வேலையை செய்வார்.
காலங்கள் கடந்தாலும் வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கி நகரவில்லை என்று ஏக்கத்தோடு இருக்கும், தனுசு ராசிக்கு இந்த காலகட்டம் நல்ல முன்னேற்றமான காலகட்டம். உங்களின் மூன்றாம் வீட்டை பார்வையிடுவதால் எடுத்த காரியத்தில் உடனடியாக வெற்றியை கொண்டு வருவார். குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தனுசு ராசி அன்பர்களுக்கு குழந்தை பேறுவை உண்டாக்குவார். அதுவும் நீங்கள் எதிர்பாராத ஒரு சிறப்பான குழந்தையாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி:
தனுசு ராசியை பொறுத்தவரை தற்போது நான்காம் வீட்டில் இருக்கும் ராகு பெயர்ச்சியாகி மூன்றாம் வீட்டை நோக்கி வரப்போகிறார். மூன்றில் சர்ப கிரகங்கள் இருப்பது சிறப்பு என்று மூல நூல்கள் கூறுகிறது. வெற்றி ஸ்தானத்தில் கேது பகவான் அமரும்போது நீங்கள் எதிர்பாராத வெற்றிகளை குவிக்க ஏற்பாடு செய்வார். கேதுவும் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து தெய்வங்களின் அனுக்கிரகத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். புதிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். தொழிற்ரீதியான நல்ல வெற்றி உங்களுக்கு கொடுக்கும்.
யார் எதைப் பற்றி சொன்னாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஜெயமே என்று நீங்கள் செல்லலாம். சர்வ கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க தயாராகி விட்டன. தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்க போகிறது. பத்தாம் இடத்தில் இருந்து கேது விலகி ஒன்பதாம் இடத்திற்கு செல்வதால் புதிய தொழில் ஆரம்பிக்கவும் அல்லது இரண்டு மூன்று தொழில்களை செய்யவும் வாய்ப்பு உண்டு.
செவ்வாய் பெயர்ச்சி:
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே, உங்கள் ராசிக்கு வருடத்தின் நான்கு ஐந்து மாதங்கள் வரை எட்டாம் வீட்டில் பயணிக்கும் செவ்வாய் வருடத்தின் பிற்பகுதியில் ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தில் பயணம் செய்வது பெரிய முன்னேற்றத்தை கொண்டு வரும். ஐந்தாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருப்பது தடையற்ற சிந்தனையையும், நன்றாக இருக்கும் குழந்தை பாக்கியத்தையும் உருவாக்கித் தரும். விநாயகரின் கைகளில் உங்களுடைய வாழ்க்கை ஒப்படைத்து விட்டால் பிறகு என்ன இருக்கிறது? அவரே பார்த்துக் கொள்வார். எதிலும் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்....