Cinema Headlines: தொழிலதிபரான சினேகா: ரிலீஸூக்கு தயாரான லால் சலாம், லவ்வர்: சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கீழே காணலாம்.
தொழிலதிபராகும் சினேகா.. பட்டுச்சேலை கடை திறப்பு அறிவிப்பு.. குவியும் வாழ்த்துகள்..
தமிழ் சினிமாவில் கே.ஆர் விஜயாவிற்கு பிறகு புன்னகை அரசி என கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா. 'என்னவளே' திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சினேகா, கமல் முதல் தனுஷ் வரை அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து உள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். ஒரு நடிகையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சினேகா தற்போது ஒரு தொழிலதிபராக தனது பயணத்தை தொடங்க உள்ளார். மேலும் படிக்க
ஜெகன் மோகன் பயோபிக் ரிலீஸ்... தியேட்டரில் YSR காங்கிரஸ் உடன் பிற கட்சியினர் மோதல்!
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ரா 2 ரிலீசாகியுள்ள நிலையில் தியேட்டரில் தொண்டர்களிடையே அடிதடி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி உள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மாநில முதலமைச்சராக உள்ளார். இதனிடையே வரும் மே மாதம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. அதனுடன் ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. மேலும் படிக்க
இஸ்லாமியராக ரஜினி நடிப்பதில் காரணம் இருக்கிறது: லால் சலாம் குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா!
3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து கெளதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடித்த ’வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இதற்கு அடுத்து சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் ’லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா சனில்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மேலும் தனது தந்தை ரஜினிகாந்தை முதல் முறையாக இப்படத்தில் இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா. மேலும் படிக்க
மணிகண்டனின் லவ்வர் படத்தின் முதல் விமர்சனம்: பாராட்டித் தள்ளிய எஸ்.டி.ஆர் 48 இயக்குநர்!
குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி, ஹரிஷ் குமார், கீதா கைலாசம், ஹரிணி , நிகிலா சங்கர், அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க
என்ன இப்படி ஆக்கிட்டீங்களே.. சைரன் பட செட்டில் புலம்பிய சமுத்திரக்கனி: போட்டுடைத்த ஜெயம் ரவி!
Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் படிக்க
கமல்ஹாசன் - ஜெயம் ரவி காட்சிகள், செர்பியாவில் அடுத்தகட்ட ஷூட்டிங்: தயாரான தக் லைஃப் படக்குழு!
மணிரத்னம் - கமல்ஹாசன் என சினிமா உலகின் இரு ஜாம்பவான்கள் சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள திரைப்படம் தக் லைஃப். கமல்ஹாசனின் 234ஆவது திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் உருவாகும் நிலையில், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. மேலும் படிக்க