மேலும் அறிய

Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்

விழுப்புரம்:  விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் எல்கேஜி மாணவி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஆசிரியர் ஏஞ்சலுக்கு வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க விக்கிரவாண்டி நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

செப்டிக் டேங்கில் தவறி விழுந்து குழந்தை பலி 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ - சேவை மைய ஒப்பந்த பணியாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். பழனிவேலுக்கும் சிவசங்கரி தம்பதிக்கும் பிறந்த மூன்று வயது பெண் குழந்தை லியா லட்சுமி விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள சென் மேரீஸ் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப்பள்ளியில் எல் கே ஜி படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று குழந்தையை பள்ளியில் பெற்றோர்கள் குழந்தை விட்டு சென்றுள்ளனர். 

குழந்தையானது 01; 50 மணி அளவில் இயற்கை உபாதையை கழிக்க பள்ளி வகுப்பறையில் இருந்து அருகிலுள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை கழிவறைக்கு சென்றுவிட்டு அருகிலுள்ள செப்டிக் டேங்க் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது குழந்தை செப்டிக் டேங்க் மீது போடப்பட்ட இரும்பு தகடு மூடி முழுவதுமாக மூடப்பட்டிருந்தது துரு பிடித்து இருந்ததால் குழந்தையின் பாரம் தாங்காமல் குழந்தை செப்டிக் டேங்க் மூடி உடைத்து கொண்டு உள்ளே விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கிறார். செப்டிக் டேங்க் உள்ள பகுதி அருகிலுள்ள கட்டிடத்தில் வகுப்பு எடுத்திருந்த குழந்தையின் ஆசிரியர் ஏஞ்சல் நீண்ட நேரமாகியும் குழந்தை வராததால் கழிவறைபகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததை பார்த்தபோது உள்ளே குழந்தை இறந்து கிடந்துள்ளது. 

இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினரே செப்டிக் டேங்க்கில் இருந்த குழந்தையை இரண்டு கம்புகள் பயன்படுத்தி மேலே தூக்கி குழந்தை மீட்டு கார் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை செய்தனர். அப்போது குழந்தை செப்டிக் டேங்க்கில் விழுந்ததை மீட்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரனை செய்தனர். அஜாக்கரதையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஏற்கனவே ஆய்வு செய்ததில் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

பள்ளி தாளாளர் உள்ளிட 3 பேர் நள்ளிரவில் கைது

குழந்தையின் பெற்றோர் பழனிவேல் சந்தேக மரணமாக உள்ளதாக விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாக்கரதையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்தனர்.

இந்நிலையில் மூவரையும் உடல் தகுதி மருத்துவ சான்று வாங்குவதற்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது தாளாளர் முதல்வர் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து ரத்த அழுத்தம் அதிகரித்து காணப்பட்டதால் இருவரையும் முண்டியாம்பக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைதான ஆசிரியர் ஏஞ்சல்சை விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யநாராயண முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்தினர். ஆஜர்படுத்தப்பட்ட ஏஞ்சல்சை பத்தாம் தேதி வரை 7 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டதை தொடர்ந்து விக்கிரவாண்டி போலீசார் கடலூர் சிறையில் ஏஞ்சல்சை அடைக்க அழைத்து சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்புPongal Gift :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?
Pongal Release : கல்லா கட்டப்போவது யார் ? இந்த பொங்கலுக்கு இத்தனை படங்களா ?
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Ind vs Aus : பேட்டிங் சொதப்பல்! ரோகித் மட்டும் தான் காரணமா? பிசிசிஐ தான் முக்கிய காரணம்..
Embed widget