ரூ.2000 தேவையில்லை.. ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Chengalpattu Master Health Checkup: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 250 ரூபாயில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறை கடந்த நூற்றாண்டை காட்டிலும் இந்த நூற்றாண்டில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. நோய்களை முன்கூட்டியே கண்டறிவது, அதின நவீன மருத்துவ மூலம் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. நவீன மருத்துவத்தில் சாதனையாகவும் இது பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் என சொல்ல கூடிய, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிகக் குறைந்த விலையில் உடல் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ள.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - Chengalpattu Government Hospital
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்னை புறநகரில் இருக்கக்கூடிய முக்கிய மருத்துவமனையாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 2500 முதல் 3000 வரை புறநோயாளிகளும், 1500 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மகப்பேறு, அவசர சிகிச்சை, சிறுநீரகத்துறை, இதயப்பிரிவு, குழந்தை நலப் பிரிவு என பல்வேறு நோய்களுக்கு தனித்தனியே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏராளமான நோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முழு உடல் பரிசோதனை - Chengalpattu Master Health Checkup
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இருந்தாலும், அவை முறைப்படுத்தப்படாமல் பெயரளவுக்கு செயல்பட்டு வந்தது. தற்போது எளிய மக்களுக்கும் முழு உடல் பரிசோதனை செய்வது, குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எளிய மக்கள் அவற்றை பெற வேண்டுமென்றால், ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. 2500 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை இருப்பதால், ஏழை எளிய மக்கள் முழு உடல் பரிசோதனை செய்வது தயக்கம் காட்டி வருகின்றனர்.
ரூபாய் 250-இல் முழு உடல் பரிசோதனை
இதனால் செங்கல்பட்டு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனையை குறைந்த விலையில், மேம்படுத்தப்பட்ட தரத்தில் வழங்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்தநிலையில் இதற்கான முன்னெடுப்பை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ளது. இதற்காக தனி கட்டிடத்தில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்த முழு உடல் பரிசோதனை மையம் முழுமையாக செயல்பட்டுக்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூபாய் 250 மட்டுமே வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் இதற்கு பதிவு செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும் ?
இந்த முழு உடல் பரிசோதனையில் சக்கரை அளவு, முழு இரத்த அணுக்கள் பரிசோதனை, சிறுநீரக செயல்பாடு, இரத்த கொழுப்பு, வயிறு ஸ்கேன், கல்லீரல் செயல்பாடு, நெஞ்சு ஊடுகதிர் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்கு வருபவர்கள் உணவு, தேநீர் ஆகியவை அருந்தாமல் வெறும் வயிற்றுடன் வரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். உடல் பரிசோதனையில் ஏதாவது பிரச்சனைகள் கண்டறியப்பட்டால் மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )