Cinema Headlines: 30 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா.. 28 ஆண்டுகளைக் கடந்த இந்தியன்.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ!
உடல்நலக்குறைவால் பிரபல மலையாள இயக்குநர் காலமானார்- அதிர்ச்சியில் திரையுலகினர்
பிரபல மலையாள இயக்குநரும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரருமான சங்கீத் சிவன் உடல்நலக்குறைவால் காலமானார். மலையாளத்தில் 1990ம் ஆண்டு நடிகர் ரகுவரன் நடித்த வியூகம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சங்கீத் சிவன். தொடர்ந்து 1992இல் வெளியான யோதா திரைப்படம் மூலம் இந்திய அளவில் சங்கீத் சிவன் கவனமீர்த்தார். மலையாளத்தில் தொடங்கி பாலிவுட்டுக்கு பயணித்து வெற்றிக் கொடி நாட்டிய சங்கீத், தன் 61 வயதில் மும்பையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு காலமானார். மேலும் படிக்க
ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ஹீரோயினாகும் ராஷ்மிகா மந்தனா.. யாருக்கு ஜோடி தெரியுமா?
தமிழ் சினிமாவில் தொடங்கி பாலிவுட் வரை பயணித்து பிரபல இயக்குநராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த திரைப்படம் சிக்கந்தர். நடிகர் சல்மான் கானை வைத்து இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தன்னை விட 30 வயது அதிகமான நடிகருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளது சினிமா வட்டாரத்தில் பேசிபொருளாகியுள்ளது.
கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
பாலிவுட்டின் காதல் பறவைகளான நடிகை தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதி விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் வதந்திகள் பரவிய நிலையில், தற்போது இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், வீடியோ ஒன்று பரவி வருகிறது. நடிகை தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதி கடந்த பிப்ரவரி மாதம் தாங்கள் பெற்றோராகப் போவது பற்றி மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். இந்நிலையில் முன்னதாக விமான நிலையத்தில் தனது கர்ப்பகால வயிற்றை வீடியோ எடுத்தவரிடம் தீபிகா படுகோன் செய்த செயல் கவனமீர்த்துள்ளது.
28 ஆண்டுகளைக் கடக்கும் இந்தியன்.. இந்த முறை யாருக்கான அரசியல் பேசுவார் கமல்?
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ஆம் ஆண்டு இதே நாளில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் இந்தியன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ள நிலையில் இன்று 28 ஆண்டுகளைக் கடந்த இந்தியன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில், ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இன்றைய சூழலில் சட்டத்தை தன் கையில் எடுத்தால் என்ன என்கிற கற்பனை இவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்திருந்தது. நேர்மையாக இருந்து வாழ்க்கையில் எதையுமே அடையாத தந்தையை வெறுக்கும் மகன். பிழைக்க, சம்பாதிக்க மற்றவர்கள் என்ன ஊழல் செய்கிறார்களோ அதையே அவனும் செய்கிறான். கடைசியில் தனது மகனையே கொலை செய்யப் போகிறார் சேனாதிபதி.