Cinema Headlines: தக் லைஃப் பட சிம்புவின் லுக்.. வசூலில் மாஸ் காண்பிக்கும் அரண்மனை 4.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: வெள்ளித்திரை வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ!
கமலுடன் களமிறங்கிய சிலம்பரசன்.. தெறிக்க விடும் “தக் லைஃப்” படத்தின் புது போஸ்டர்!
கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. 37 ஆண்டுகளுக்குப் பின் கமல் - மணிரத்னம் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், பெரும் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. முன்னதாக இப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக அறிவிப்பட்டு அவர் விலகிய நிலையில், தற்போது அந்தப் பாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்நிலையில் சிம்புவின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து படக்குழு வீடியோ பகிர்ந்துள்ளது.
மாஸ் ஹீரோக்களை மிஞ்சிய சுந்தர்.சி - தமன்னா காம்போ! 5 நாள்களில் வசூலில் அசத்திய அரண்மனை 4!
அரண்மனை 4 திரைப்படம் 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தினர் தகவல் பகிர்ந்து வருகின்றனர். சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சுந்தர் சியின் பிரபலமான பேய் சீரிஸாக விளங்கும் இப்படத்தின் 4ஆம் பாகம் வெளியானது முதல் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இளையராஜாவை குறை சொல்லி பயனில்லை; நமக்கு புரியவில்லை என்றுதான் அர்த்தம்: சீமான் அதிரடி
இளையராஜா - வைரமுத்து இடையேயான பிரச்னை பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தன் பாடல்களுக்கு முழு காப்புரிமையை இளையராஜா கோரி வழக்கு தொடர்ந்துள்ளதை அடுத்து கோலிவுட் வட்டாரத்தில் வெடித்துள்ள சர்ச்சையில் வைரமுத்து கருத்து தெரிவிக்க, இது இரு தரப்பினர் இடையேயான பிரச்னையாக வெடித்தது. இந்நிலையில் “2 தகப்பன்கள் இடையேயான மோதலில் ஏன் பிள்ளைகளை இழுத்து விடுகிறீர்கள்? இது தீர்க்கப்பட்ட வேண்டிய பிரச்னையாகும்” என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
"குபேரன்" ஆவதற்கு குப்பைக் கிடங்கில் கிடந்த நடிகர் தனுஷ் - ஏன் அப்படி செய்தார்?
பிரபல டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் குபேரா திரைப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தனுஷ் கிட்டத்தட்ட பத்து மணி நேரம் மாஸ்க் உட்பட எந்தவித பாதுகாப்பு உபகரணங்கலும் இல்லாமல் தன் பிச்சைக்காரர் கதாபாத்திரத்துக்காக குப்பைக் கிடங்கில் நடித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: Cooku with Comali 5: குக்குகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? குக்கு வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களில் யார் டாப்?