Cinema Headlines: பாலா அடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மருத்துவமனை கட்டும் ரஜினி? சினிமா ரவுண்ட்- அப் இன்று!
Cinema News: தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
![Cinema Headlines: பாலா அடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மருத்துவமனை கட்டும் ரஜினி? சினிமா ரவுண்ட்- அப் இன்று! Cinema Headlines march 1st today Tamil Cinema news rajinikanth bala joshua gautham menon bala mamitha baiju manjummel boys Cinema Headlines: பாலா அடித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மருத்துவமனை கட்டும் ரஜினி? சினிமா ரவுண்ட்- அப் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/01/e89b922d3e3f8399488d4f022ea68eb91709293129249574_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த்? ஏழைகளுக்கு இலவசம் எனத் தகவல்
தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). 1975ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் ஆரம்பித்த தனது திரை வாழ்க்கையை அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சினிமாவில் அறிமுகமான தொடக்க காலத்தில் மிகவும் குறைவான சம்பளத்தில் வேலை செய்து வந்தார் ரஜினிகாந்த். இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் ரஜினி. மேலும் படிக்க
மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்.. ஆனால் கதை? கெளதம் மேனன் இயக்கியிருக்கும் ஜோஸ்வா பட விமர்சனம்!
வழக்கம்போல் கெளதம் மேனன் படங்களில் வருவதுபோல் நாயகனான ஜோஸ்வா மற்றும் நாயகி குந்தவை ஆகிய இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். காதலிக்கத் தொடங்குகிறார்கள். ஜோஸ்வா தான் பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையை சேர்ந்தவன் என்கிற உண்மையை குந்தவையிடம் சொல்கிறான். இருவரும் பிரிகிறார்கள். குந்தவை சர்வதேச அளவில் பிரபல வழக்கறிஞராக இருக்கிறார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான மாஃபியா கும்பலின் தலைவனின் வழக்கை வாதாட இருக்கிறார் குந்தவை. மேலும் படிக்க
“என்ன ஒரு சிறப்பான மேக்கிங்” - மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பாராட்டி கார்த்திக் சுப்பராஜ் பதிவு!
மலையாளத்தில் கடந்த பிப்.22ஆம் தேதி வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்' (Manjummel Boys) திரைப்படம் தான் தற்போதைய 'டாக் ஆஃப் த டவுன்' திரைப்படம். கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்து, மல்லுவுட் தாண்டி கோலிவுட்டிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற திரைப்படம் ‘பிரேமம்’. இந்தப் படத்துக்குக்குப் பிறகு அப்படி ஒரு சென்சேஷனை தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்த்தியுள்ளது. மேலும் படிக்க
இசையால் இணைந்த இதயங்கள்.. ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த சினேகன்..!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற எண்ணற்ற பாடல்களின் வரிகள் மூலம் ரசிகர்களின் இதயத்துக்கு மிகவும் நெருக்கமாக சென்ற படலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் சினேகன். எழுத்தின் மீதும் சினிமா மீதும் இருந்த தீராத காதலால் விவசாய குடும்பத்தை சேர்ந்த சினேகன் சென்னைக்கு வந்து பல போராட்டங்களுக்கு பிறகு கவிஞர் வைரமுத்திவிடன் உதவியாளராக பணியாற்றி அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை பெற்று இன்று வரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு தன்னுடைய வரிகளால் அழகு சேர்த்துள்ளார். மேலும் படிக்க
பாலா அடித்ததால் வணங்கானில் இருந்து விலகினேனா? - நடிகை மமிதா பைஜூ விளக்கம்!
நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் பாலா தமிழில் “வணங்கான்” என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். முதலில் இப்படத்தில் ஹீரோவாக சூர்யா நடித்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய சில வாரங்களிலேயே கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சூர்யா விலகியதாக பாலா தெரிவித்தார். தொடர்ந்து இந்த படத்தை நடிகர் அருண் விஜய்யை வைத்து அவர் எடுத்து முடித்துள்ளார். மேலும் படிக்க
இவான்கா டிரம்ப் முதல் ஃபேஸ்புக் நிறுவனர் வரை.. களைகட்டும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணம்
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)