Rajinikanth Hospital: சென்னையில் மருத்துவமனை கட்டும் ரஜினிகாந்த்? ஏழைகளுக்கு இலவசம் எனத் தகவல்
Rajinikanth: சென்னையில் 12 ஏக்கரில் நடிகர் ரஜினிகாந்த் நிலம் வாங்கியுள்ளதாகவும், அந்த இடத்தில் மருத்துவமனை கட்டத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினி:
தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் ரஜினிகாந்த் (Rajinikanth). 1975ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் ஆரம்பித்த தனது திரை வாழ்க்கையை அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.
சினிமாவில் அறிமுகமான தொடக்க காலத்தில் மிகவும் குறைவான சம்பளத்தில் வேலை செய்து வந்தார் ரஜினிகாந்த். இப்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் ரஜினி. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்துக்காக ரஜினிகாந்த் 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்துக்கு போயஸ் கார்டனில் ஒரு பெரிய பங்களா 40 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. இந்த வீடு மட்டுமல்லாமல் சென்னையில் வெவ்வெறு இடங்களில் வீடுகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் சென்னையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தையும் நடத்தி வருகிறார் ரஜினி. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது சொந்த மாநிலமான கர்நாடகாவிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வீடுகளும் சொத்துகளும் இருப்பதாகத் தெரிகிறது.
சென்னையில் மருத்துவமனை கட்டப்போகும் ரஜினி:
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் மருத்துவமனை கட்டப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன. ஓம்.எம்.ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் வழியில் 12 ஏக்கர் நிலத்தினை ரஜினிகாந்த் வாங்கி உள்ளதாகத் தெரிகிறது.
திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இதற்கான பத்திரப்பதிவு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. 12 ஏக்கரில் கட்டவிருக்கும் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக விரையில் ரஜினி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஸி ஷூட்டிங்கில் ரஜினிகாந்த்:
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டையன்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் தற்போது பிஸியாக உள்ளார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் பீம் புகழ் ஞானவேலின் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக வெளியான அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தையே எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. இந்தப் படம் இந்தாண்டு மே அல்லது ஜூனில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க