Cinema Headlines July 16: நாளை வெளியாகிறது விடுதலை 2 பர்ஸ்ட் லுக்; இந்தியன் 2வின் 4வது நாள் வசூல்: இன்றைய சினிமா செய்திகள்
Cinema Headlines July 16 : விடுதலை 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11:30 மணிக்கு வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தின் வசூல் மூன்று நாட்களை காட்டிலும் நான்காவது நாள் சற்று குறைந்துள்ளது.
விடுதலை 2 ஃபர்ஸ்ட் லுக் :
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற விடுதலை பார்ட் 1 படத்தை தொடர்ந்து தற்போது விடுதலை பார்ட் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'விடுதலை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை ஜூலை 17 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த சர்ப்ரைஸ் தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நெக்ஸ்ட் :
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று ஆனி வருசாபிஷேகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுடன் சுவாமி தரிசனம் செய்தார். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படப்பிடிப்பில் மும்மரமாக ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.
பா.ரஞ்சித் நடத்தும் பேரணி :
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கூலிப்படையால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது தப்பி தப்பியோட முயன்ற திருவேங்கடத்தை காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டதில் திருவேங்கடம் உயிரிழந்தார்.
இந்நிலையில் கே ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக சென்னை எழும்பூரில் வரும் ஜூலை 20 ஆம் தேதி பேரணி ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் இப்படி கூறப்பட்டுள்ளது.
ஷாருக்கானுக்கு வில்லனாகும் அபிஷேக் பச்சன் :
கடந்த ஆண்டு கடந்த ஆண்டு பதான் , ஜவான் , டங்கி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக சுஜய் கோஷ் மற்றும் சித்தார்த் ஆனந்த் இணைந்து திரைக்கதை எழுத ஷாருக்கான் நடிக்க இருக்கும் படத்துக்கு 'கிங்' றன தலைப்பிடப்பட்டுள்ளது. ஷாருக்கானின் கனவுப் படமாக இப்படம் உருவாக உள்ளது என்றும் அதில் அவரின் மகள் சுஹானா இணைந்து நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதில் வில்லனாக அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2வின் 4வது நாள் வசூல் :
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் கடந்த ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படம் வெளியானது முதல் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. முதல் நாளே 100 கோடி வசூலை கடந்தது இந்தியன் 2 படம். விடுமுறை நாட்கள் முடிந்து நேற்று முதல் வேலை நாட்கள் துவங்கியதால் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குறைந்துள்ளது. அதனால் முதல் மூன்று நாட்களை காட்டிலும் நான்காவது நாள் வசூல் சற்று குறைந்து இந்தியாவில் 3 முதல் 5 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.