மேலும் அறிய

Cinema Headlines: வெளியான தங்கலான் ட்ரெய்லர்... மம்மூட்டி உடன் இணையும் கௌதம் மேனன்... சினிமா செய்திகள் இன்று!

July 10 Cinema Headlines : இந்தியன் 2 படத்துக்கு வந்த கெடுபிடி, மம்மூட்டி உடன் இணையும் கௌதம் மேனன் உட்பட இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்.

சாவுக்கு துணிஞ்சவனுக்குத்தான் இங்க வாழ்க்கை.. வெளியானது தங்கலான் ட்ரெய்லர்

பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், நடிகைகள் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள தங்கலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை தயாரித்துள்ளது. விக்ரமின் 61வது படமாக உருவாகி இருக்கும் தங்கலான் படம், கோலார் தங்க சுரங்கத்தில் தங்கத்தை எடுக்கும் பூர்வக்குடி மக்கள், அவர்கள் மீது ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்படும் சுரண்டல் ஆகியவற்றை மையப்படுத்தி வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படத்துக்கு வந்த கெடுபிடி :

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அனுமதியின்றி 'இந்தியன்' முதல் பாகத்தில் தான் சொல்லி கொடுத்த வர்மக்கலை முத்திரைகளை 'இந்தியன் 2' படத்தில் பயன்படுத்த தடையில்லா சான்று பெறாமலே பயன்படுத்தியுள்ளனர் என கூறி படக்குழு மீது மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன் எனும் நபர் இந்தியன் 2 படத்தினை வெளியிட தடை விதிக்க வேண்டுமென்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.  அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் கால அவகாசம் கோரப்பட்டதால் இந்த வழக்கு விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

தமன்னா நெகிழ்ச்சி :

எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி' திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை கடந்த நிலையில் அப்படத்தில் அவந்திகா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தமன்னா தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பு குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை போஸ்ட் செய்து இருந்தார். அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து அப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி. அப்படம் ஒரு பெரிய கற்றல் அனுபவமாகவும் இருந்தது. எனக்கு கிடைத்த பாக்கியத்தை நான் என்றைக்குமே கொண்டாடுவேன். அன்பை வழங்கிய பார்வையாளர்களுக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என பதிவிட்டு இருந்தார். 

கெளதம் வாசுதேவன் - மம்மூட்டி காம்போ :

தமிழ் சினிமாவில் காதல் படங்களில் புதுமையைக் காட்டும் கௌதம் மேனன் தற்போது மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் கௌதம் மேனன் இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பேனி இந்தப் படத்தை தயாரிக்கிறது.  

இந்தியன் 2 உடன் மோதும் டீன்ஸ் :

பயாஸ்கோப் மற்றும் அகிரா ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டீன்ஸ்' திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. பதின் வயதினரை மையப்படுத்திய கதையாக உருவாகியுள்ள இப்படம் நேரடியாக கமலின் இந்தியன் 2 படத்துடன் மோத களத்தில் குதிக்கிறது. பெரிய அளவில் ஸ்டார் வேல்யு இல்லாவிட்டாலும் தனது படங்களைத் தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்களுடம் மோத விடுவதில் பார்த்திபன் துணிச்சலானவர். 

ரசிகர்களை கவர்ந்த கமல் :

'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக இருப்பதால் படத்தில் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழு ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை நேரடியாக சந்தித்து பேசியது. அப்போது கமல்ஹாசன் பேசுகையில் " இத்தனை ஆண்டுகள் நீங்கள் என்னை ஒரு ஸ்டாராக வைத்திருக்கிறீர்கள்.  என்னைப் போன்ற நிறைய நடிகர்களை உருவாக்குவது மட்டுமே நான் உங்களுக்கு செய்யக்கூடிய ஒரே நன்றிக்கடன்" என தெரிவித்து இருந்தார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Governor Ravi: மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதமா.? பட்டியல் போட்டு பதிலடி கொடுத்த ஆளுநர் மாளிகை
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
திறன் இயக்கம்: 3 லட்சம் மாணவர்கள் சாதனை! இரண்டாம் கட்டம் மூலம் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் அரசு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு: இன்றே கடைசி! டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை - தவறினால் என்ன நடக்கும்?
Trump Vs Modi: “மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
“மோடி என் நண்பர், சிறந்த மனிதர், ரஷ்யா கிட்ட எண்ணெய் வாங்குறத நிறுத்திட்டார்“; ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை
Pakistan Vs Afghanistan: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் வெடித்த மோதல்; பாக்.-ஆப்கன் எல்லையில் பதற்றம்; 5 பேர் பலி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
கோவையில் மீண்டும் பெண் கடத்தல்; பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமா தமிழ்நாடு? ஈபிஎஸ் கேள்வி
TN Weather: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்.? புதிய புயலுக்கு தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்- எப்போ தெரியுமா.?
Vaiko: எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
எனக்கு செய்த பாவத்திற்கு தான் இப்போ ஓபிஎஸ் அனுபவிக்கிறார்.! கொதிக்கும் வைகோ- நடந்தது என்ன.?
Embed widget