மேலும் அறிய

20 வயதில் திருமணம் செய்து ஏமாற்றிய ஆசாமி...சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா பகீர்

ஆதி என்கிற தன்னை திருமணம் செய்துகொண்டு தன்னிடம் நகை மற்றும் பணம் மோசடி செய்ததாக சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா. அண்மை காலங்களில் இவரைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. ஸ்வேதாவின் கணவர் ஆதி என்பவர் பல பெண்களிடம் பணம் மற்றும் நகை மோசடி செய்துள்ளதாக பல பெண்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தனது கணவர் ஆதி குறித்து ஸ்வேதா இன்ஸ்டாகிராமி பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில் ஆதி என்பவர் சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதாவுக்கு தனக்கும் திருமணமாகிவிட்டதாக கூறி அவருடனான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். ஆனால் அந்த நபரை தனக்கு யாரென்றே தெரியாது என ஸ்வேதா மறுத்தார். இப்படியான நிலையில் பிக்பாஸ் தமிழ் மூலம் பிரபலமான தாமரைச் செல்வி அதிரடி குற்றசாட்டை வைத்தார் . சின்ன மருமகள் சீரியலில் நடித்தபோது தனக்கும் ஸ்வேதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஸ்வேதாவுக்கு ஆதி என்பவருடன் திருமணம் ஆனதால் அவரது குடும்பத்தினர் அவரை வீட்டில் சேர்க்கவில்லை. இதனால் ஸ்வேதா மற்றும் ஆதி என்னுடைய வீட்டில் தங்கி இருந்தார்கள். ஆதியும் ஸ்வேதாவும் பிரிந்தபின்னர் ஆதி என்னிடம் பணம் மற்றும் நகைகளை வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார் என தாமரை செல்வி கூறியிருந்தார். தற்போது இந்த சர்ச்சை பெரிதாகியுள்ள நிலையில் ஸ்வேதா தனது சார்பாக பிரச்சனை குறித்த முழு விளக்கம் கொடுத்துள்ளார்

20 வயதில் திருமணம்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வேதா " மிக முக்கியமான ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கனவே கூறியபடி, நாங்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டோம் (reg marriage )அப்போது எனக்கு 20வயது மட்டுமே. மிகவும் சின்ன பொண்ண இருந்ததால் அவரைப் பற்றிய பல விஷயங்கள் எனக்கு தெரியாமல் இருந்தது. பின்னர் காலப்போக்கில் ஒவ்வொன்றாக உண்மைகள் தெரிய வந்தன. அவர் தன்னிடம் ஒரு வழக்கே உள்ளது என்று கூறினார். அதை சரி செய்யலாம் என்ற நம்பிக்கையில், அந்த வழக்கிற்காக நான் அதிகமான செலவுகளைச் செய்தேன். ஆனால் இப்போது தான் புரிகிறது அந்த வழக்கைப் பற்றி அவர் கூறிய அனைத்தும் பொய் என்று .

விவாகரத்து தொடர்ந்துள்ளேன்

அவர்மீது பல வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், இந்த உறவு தொடர இயலாது என்று நான் தெளிவாக தெரிவித்தேன். அதன்பிறகே அவருடைய உண்மையான தன்மை வெளிப்பட்டது. பின்னர் நான் அவரை விட்டு விலகி, என் குடும்பத்துடன் திரும்பி சேர்ந்தேன். காதலித்த காலத்தில், "வியாபாரம் செய்கிறேன்” என்று கூறி, என்னிடமிருந்து பெருமளவு பணமும் நகைகளையும் ஏமாற்றி பெற்றார். நான் அவரை “காதலித்த” காரணத்தினால், அவர் கூறிய அனைத்தையும் நம்பி அவற்றை வழங்கினேன். தற்போது, நான் அவர்மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளேன்; அது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த பிரச்சினையை சட்டப்படி சமாளித்து வருவதால் இதுவரை அமைதியாக இருந்தேன். இப்போது தான் அவர் எவ்வளவு பெரிய மோசடி செய்பவர் என்பது எனக்கு முழுமையாக புரிந்துள்ளது. நான் எடுத்த இந்த முடிவுக்காக மிகவும் பெருமைப்படுகிறேன். இனியும் அவருடன் தொடராமல் விலகியதே சரியான முடிவு என்று.

பல பெண்களிடம் மோசடி செய்த ஆதி

நானும் அவரை நம்பி காதலித்தேன்; என் காதலின் காரணமாக அவரை முழுமையாக நம்பி, எந்த இடத்திலும் அவரை விட்டுக் கொடுக்காமல், எல்லா மேடைகளிலும் அவரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், என் காதலுக்குத் தகுதியற்றவர் என்பதை அவர் தானே நிரூபித்தார். அவர் பலரையும் இதேபோல் ஏமாற்றியுள்ளார். பலர் பாதிக்கப்பட்டு வருந்தி வருகின்றனர். என்னை ஏமாற்றியதுபோல, மற்றவர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். நான் ஏற்கனவே தெளிவாகவே அவர் ஒரு மோசடி நபர்.யாரும் அவரை நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தும், அவரை நம்பி ஏமாந்து இருக்கிறீர்கள் அவரால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வேலைகளை கூட நிம்மதியாக செய்ய முடியாமல் உள்ளேன்..சமூக ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளேன். நான் விலகிய பின்னரும், வழக்கு தொடர்ந்த பின்னரும் கூட அவர் என்னை தொடர்ந்து கெடந்தாவ செய்து வருகிறார்.எனவே, உங்களையெல்லாம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அவரை நம்பி யாரும் promotion, photoshoot விளம்பர வேலைகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். இதற்கெல்லாம் அவர் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். நம்மால் இயன்றதை நாமே செய்வோம்.அதற்கு மேல் கடவுள் நீதியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்தால் மிகுந்த நன்றியாக இருக்கும்.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget