5 வயதில் நடந்த கொடுமை.. 13 வயதில் அட்ஜெஸ்ட்மென்ட் ! தளபதியுடன் நடித்த குழந்தை நட்சத்திரம் குமுறல்!
குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களிலும், சீரியலிலும் நடித்த நடித்து பூஜா பரேஷ். இவர் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் ஜொலித்த பலர், பருவ வயதை எட்டிய பின்னர்... சினிமாவை விட்டே காணாமல் போய் விடுகிறார்கள். அதே நேரம் குழந்தை நட்சத்திரமாக இருந்து, ஹீரோ - ஹீரோயினாகவும் ஜெயித்தவர்கள் ஒரு சிலரே. கமல்ஹாசன், மீனா, கீர்த்தி சுரேஷ், மகேஷ் பாபு, நிவேதா தாமஸ் போன்ற ஒரு சிலரை குறிப்பிட்டு கூறலாம்.
ஆனால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தேசிய விருது பெற்ற பிரபலங்கள் கூட திரையுலகை விட்டு காணாமல் போய் உள்ளனர். நடிகை கல்யாணி, உள்ளிட்ட சில பிரபலங்கள்... தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க முடியாமல் போக காரணம், தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் என வெளிப்படையாகவே சில பேட்டிகளில் கூறியுள்ளார்.
இவரை தொடர்ந்து பூஜா பரேஷ் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி கூறியுள்ளார். பூஜா பரேஷ் தற்போது 'லைப் ஆப் மேக் அப் ஆர்ட்டிஸ்ட்' என்கிற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதற்க்கு முன்பு தன்னுடைய 5 வயது முதல் 13 வயது வரை பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக குட்டி குட்டி ரோலில் நடித்துள்ளார்.
பூஜா பரேஷ் குழந்தை நட்சத்திரமாக மிகவும் பிரபலமானவர் இல்லை என்றாலும், இவர் தற்போது நடித்து வரும்... 'லைப் ஆப் மேக் அப் ஆர்ட்டிஸ்ட்' வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தற்போது ஃபேஷன் டிசைனிங் மற்றும் மேக் அப் ஆர்டிஸ்ட்டாகவும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் நம்ப மீடியா யூ டியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில்... தொகுப்பாளர் நீங்கள் ஏன் குழந்தை நட்சத்திரமாக திரையில் தொடரவில்லை என கேள்வி எழுப்பியபோது... சில விஷயங்களை மிகவும் எமோஷ்னலாக பேசி உள்ளார். "எனக்கு 5 வயது இருக்கும் போதே... என் அம்மா பக்கத்தில் இல்லாத சமயத்தில் எனக்கு மேக்கப் போடுபவர்கள் பேட் டச் செய்துள்ளார்கள். அப்போதைக்கு அது என்னவென்று கூட தெரியாது.
நான் சினிமாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறியதற்கு முக்கிய காரணம் 13 வயதிலேயே என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டார்கள். அதன் பின்னர் எனக்கு பயம் வந்துவிட்டது. இது தான் நான் விலக காரணம். இப்படியெல்லாம் பேசுவது பற்றி உங்கள் அம்மா அவர்களிடம் எதுவும் கேட்கவில்லையா என கேட்டதற்கு. உங்க பொண்ணு வரவில்லை என்றால் நீங்க அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுங்க என என் அம்மாவிடமே மோசமாக பேசினார்கள். சினிமா என்றாலே இப்படித்தான் இருக்குமா? என்கிற அச்சத்தோடு தான் வெளியே வந்தேன் என பேசியுள்ளார். இவரது பேச்சு தற்போது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















